கணவரின் கிட்னியை ரூ.10 லட்சத்திற்கு விற்று காதலனுடன் மாயமான மனைவி! – என்ன நடந்தது?

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவரின் சிறுநீரகத்தை விற்க வற்புறுத்தி அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு காதலுடன் சென்றுள்ளார்.

மேற்குவங்கம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள சங்க்ரைலைச் சேர்ந்த இந்தப் பெண் தனது மகளின் கல்வி மற்றும் திருமணத்திற்காக பணம் சேமிக்க வேண்டுமென கணவரின் சிறுநீரகத்தை விற்க வற்புறுத்தியுள்ளார். கணவரின் சிறுநீரகத்தை 10 லட்சத்துக்கு விற்குமாறு அவருக்கு மனைவி மிகுந்த அழுத்தத்தை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

மனைவியின் தொடர்ச்சியான வற்புறுத்தலுக்கு பிறகு கணவர் தனது சிறுநீரகத்தை விற்க ஒப்புக்கொண்டுள்ளார். ஒரு வருடத்திற்கு மேலாக காத்திருந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்புதான் உறுப்பு வாங்குவோரை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த உறுப்பை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து குடும்பத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்திவிடலாம் என்று அந்த நபர் தனது சிறுநீரகத்தை விற்றுள்ளார்.

தனது உறுப்பு தானத்தின் மூலம் சம்பாதித்த பணத்தை எதிர்காலத்தில் தனது மகளின் திருமணத்திற்கு பயன்படுத்தலாம் என்று எண்ணிய அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. கணவரை இவ்வாறு வற்புறுத்தி உறுப்பை தானம் செய்ய வைத்ததற்கு பின்னால் மனைவி வேறொரு ஒரு திட்டம் போட்டுள்ளார்.

அவரது மனைவி தனது எதிர்காலத்தை பாரக்பூரை சேர்ந்த மற்றொரு நபருடன் திட்டமிட்டுள்ளார். ஓவியரான அந்த நபர் facebook மூலம் இந்தப் பெண்ணுக்கு அறிமுகமாகி, நாளடைவில் இருவரும் காதலில் விழுந்துள்ளனர். இதற்காகவே திட்டமிட்டு கணவரை சிறுநீரகத்தை விற்கச் செய்துள்ளார். அதன் மூலம் கிடைத்த பத்து லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு காதலுடன் சென்றுள்ளார் அந்த பெண்.

இதுகுறித்து கணவர் போலீஸில் புகார் அளிக்கவே இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். 1994 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் மனித உறுப்புகள் விற்பனை செய்வது சட்ட விரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.