ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கபடும் சாம்பியன்ஸ் டிராபி இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்க உள்ளது. பாகிஸ்தானில் மற்றும் துபாயில் நடைபெறும் இத்தொடர் வரும் 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 09ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இத்தொடருக்கான அணிகளையும் அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது. இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கரின் 5வது போட்டியின் போது, அவருக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் ஓய்வில் இருந்து வருகிறார். சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் அவரது பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால் அவர் விளையாடுவாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.
5 வாரம் ஓய்வு தேவை
அதேபோல் அவர் 5 வாரத்திற்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்வதால் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் அவர் உடல் தகுதியை எட்டினால் மூன்றாவது போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது என கூறப்பட்டது.
சாம்பியன்ஸ் டிராபில் பும்ராவுக்கு மாற்று வீரராக அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளார் என வெளிப்படையாக ரோகித் சர்மாவும் கூறியிருந்தார். இந்த நிலையில், பும்ரா உடல் நலம் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மேலும் படிங்க: இந்தியா – இங்கிலாந்து 5வது டி20: ஒரே ஒரு சதம்தான்.. எல்லா ரெக்கார்டும் காலி!
என்சிஏ செல்லும் பும்ரா
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இன்று பிப்.03) தன் காயம் குறித்து ஸ்கேன் செய்ய பெங்களூரில் இருக்கு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்கிறார்.
இதையடுத்து அங்கு அவருடைய காயம் குறித்து அறிக்கைகள் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனை பெருத்தே அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் விளையாடுவாரா? என்பது முடிவாகும் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறுகையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என கூறிய காரணம் அவருக்கு 5 வாரம் ஓய்வு தேவை என்பதற்காகதான்.
நாங்கள் மருத்துவக் குழுவிடம் இருந்து அவரது உடல்நலம் குறித்து அறிக்கையை பெறுவோம். பிப்ரவரி தொடக்கத்தில் அவரது காயம் குறித்து நமக்கு முழுமையாக தெரியவரும். அதை வைத்து தான் அவர் விளையாடுவாரா மாட்டாரா என்கிற முடிவுக்கு வர முடியும் என கூறினார்.
மேலும் படிங்க: JOHN CENA | கடைசி ராயல் ரம்பல் மேட்சில் ஜான் சீனா அதிர்ச்சி தோல்வி… WWE ரசிகர்கள் ஷாக்