சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா விளையாடுவார மாட்டாரா? வெளியான முக்கிய தகவல்!

Bumrah Injury Update: இந்திய அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளராக பும்ரா இருந்து வருகிறார். 2024 டி20 உலக கோப்பையை வெல்வதற்கு ஒரு முக்கிய தூணாக இருந்தார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பும்ரா மட்டும் தனியாக விளையாடிக் கொண்டிருந்தார். அதிகமாக ஓவர்கள் வீசியதால் பும்ராவிற்கு ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் கடைசி இன்னிங்சில் பும்ரா பந்து வீசவில்லை. மேலும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான அணியிலும் பும்ரா இடம்பெறவில்லை. தற்போது அவர் பிசிசியின் மருத்துவ குழுவின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா எப்படியாவது விளையாட வேண்டும் என்று அனைத்து முயற்சிகளையும் பிசிசிஐ செய்து வருகிறது.

 மேலும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி : இந்திய அணியின் 2 பிரம்மாஸ்திரம் இதுதான் – கவுதம் கம்பீர் முக்கிய தகவல்

சமீபத்தில் ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதையும் பும்ரா வென்று இருந்தார். சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்த மாதம் நடைபெற உள்ளது. இதற்காக விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் கே எல் ராகுல் போன்ற சீனியர் வீரர்கள் தயாராகி வருகின்றனர். பிசிசிஐ உத்தரவுக்கு பிறகு தற்போது இவர்கள் அனைவரும் ரஞ்சி தொடரிலும் விளையாடி வருகின்றனர். 2023 ஒரு நாள் உலகக் கோப்பைக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் இடம்பெறாமல் இருந்த முகமது ஷமியும் தற்போது குணமாகி இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்று சிறப்பாக பந்து வீசி இருந்தார். 

சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா இடம் பெறுவாரா?

தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி பும்ரா பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு அவருக்கு பிசிசிஐயின் மருத்துவ குழு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் பும்ராவின் தற்போதைய உடல்நிலை குறித்த தகவல்கள் பிசிசிஐக்கு அனுப்பப்படும், அதன் பிறகு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம் பெறுவாரா மாட்டாரா என்ற உறுதியான தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் பும்ரா இடம்பெற மாட்டார் என்று இந்திய அணியின் தலைமை தேர்வாளர் அஜித் அகார்கர் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் பும்ராவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு மூன்றாவது போட்டியிலும் அவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 

“பும்ராவிற்கு குறைந்தது 5 வாரங்கள் ஆவது ஓய்வு தேவைப்படுகிறது.இதனால் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் அவர் இடம் பெற மாட்டார். அவருடைய உடல் நிலையை குறித்த மருத்துவ குழு உடன் தொடர்ந்து கேட்டு வருகிறோம். பும்ராவிற்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அவர் விரைவில் குணமடைந்து வருவார் என்று நம்புகிறோம்” என்று அஜித் அவர்கள் தெரிவித்திருந்தார்.

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவிந்திர ஜடேஜா, ரிஷப் பந்த்.

 மேலும் படிங்க: முதல் தர கிரிக்கெட்டில் விராட் கோலியை தட்டி தூக்கிய அந்த 9 பவுலர்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.