இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக பிப்ரவரி 12ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு நடவடிக்கை உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் அங்கிருந்து அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபருடன் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் […]