இந்திய அணியில் இணைந்த வருண் சக்கரவர்த்தி! ஆனால் முக்கிய வீரர் நீக்கம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான பயிற்சியில் இந்திய அணியின் வீரர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். நாக்பூரில் உள்ள மைதானத்தில் கடந்த இரண்டு நாட்களாக பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்திய டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய வருண் சக்கரவர்த்தி இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் படிங்க: கோலியை அவுட்டாக்க பஸ் டிரைவர் ஐடியா கொடுத்தாரா? ரஞ்சி பவுலர் சங்வான் பகிரும் சுவாரஸ்யம்!

இந்திய அணியில் இணைந்த வருண் சக்கரவர்த்தி

சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த தொடர் முழுவதும் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக விளையாடியிருந்தார், ஒட்டுமொத்தமாக 14 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியிருந்தார். இதன் மூலம் ஒரு தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். இங்கிலாந்தின் வீரர்கள் வருண் சக்கரவர்த்தியை சமாளிக்க முடியாமல் விக்கெடுகளை இழந்து இந்த தொடரையும் இழந்துள்ளனர்.

சாம்பியன்ஸ் டிராபியில் வருண்?

வருண் சக்கரவர்த்தியை சாம்பியன் டிராபி தொடரிலும் எடுக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் குரல்கள் ஒழிக்க தொடங்கி உள்ளது. ஆனால் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டதால் வரும் சக்கரவர்த்தி எடுக்கப்படுவாரா மாட்டாரா என்ற சந்தேகமும் இருந்து வந்தது. இந்நிலையில் பிசிசிஐ தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் வரும் சக்கரவர்த்தி இணைந்துள்ளார் என்று அறிவித்துள்ளனர்.

 

Varun Chakaravarthy added to India’s squad for ODI series against England.

Details  #TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank

— BCCI (@BCCI) February 4, 2025

பும்ரா நீக்கம்?

ஆனால் இந்த தொடருக்கான இந்திய அணியில் இருந்து பும்ரா நீக்கப்பட்டுள்ளார். முன்னதாக கடைசி ஒரு நாள் போட்டியில் மட்டும் பும்ரா விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வெளியான அறிவிப்பில் பும்ராவின் பெயர் இடம் பெறவில்லை. பும்ராவின் காயம் முழுவதும் குணம் அடைந்தால் நேரடியாக சாம்பியன்ஸ் டிராபியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன், ஹுப்மன் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (WK), ரிஷப் பந்த் (WK), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர். , அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், வருண் சகரவர்த்தி.

மேலும் படிங்க: இந்தியா – இங்கிலாந்து ஒருநாள் தொடர்: ரிஷப் பண்ட்டிற்கு இடம் இருக்கா? பிளேயிங் 11 இதோ!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.