கல்வியில் சீர்திருத்தங்களை ஊக்குவிக்கும் பட்ஜெட்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 8-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையுடன் சேர்த்து அவர் முழுமையான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய பட்ஜெட்டை வரும் நிதியாண்டுக்கு தந்துள்ளார்.

2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பொருளாதார செயல்பாட்டினை ஊக்குவிப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அதன்படி, நுகர்வை அதிகரித்தல், தனியார் முதலீடுகளை தூண்டுதல், திறன்மிக்க இளைஞர்களை உருவாக்குதல், புதிய தொழில்நுட்ப அறிவை வளர்த்தெடுத்தல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவைதவிர, மத்திய மக்களை மையப்படுத்தும் திட்டங்கள், வேலைவாய்ப்பு மற்றும் செல்வத்தை உருவாக்குவதற்கான பல்வேறு அம்சங்களும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

நிதியமைச்சர் முக்கிய செலவினங்களை நிதி விவேகத்துடன் அணுகியுள்ளது சிறப்பானது. கடந்த 2015 பட்ஜெட்டில் மொத்த செலவினத்தில் மூலதன செயல் திட்டங்களுக்கான ஒதுக்கீடு 14 சதவீதமாக இருந்த நிலையில், அதுப் படிப்படியாக அதிகரித்து தற்போது 22 சதவீதத்தை எட்டியுள்ளது. அதன்படி பொது உள்கட்மைப்பு திட்டங்களுக்காக ரூ.11.21 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இதனால் வேலைவாய்ப்பு அதிகளவில் உருவாகும் என்பதுடன் நுகர்வு நடவடிக்கைகளும் வேகமெடுக்கும்.

மேலும், 2025-26 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறையின் அளவு 4.4 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதுடன், 2031-க்குள் ஜிடிபியில் கடன் விகிதத்தை 50 சதவீதமாக குறைப்பது, ரூ.12 லட்சம் வரை தனிநபர் வருமான வரி விலக்கு போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ள போதிலும் இந்த பட்ஜெட்டில் கல்விக்கு ரூ.1.28 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இது, 2024-25 நிதியாண்டுக்கான திருத்திய மதிப்பீட்டைக்காட்டிலும் 12.8 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இது, ஏனைய அமைச்சகங்களுடன் ஒப்பிடுகையில விகிதாச்சார அடிப்படையில் மிக அதிகமாகும்.

உலகளாவிய தரத்துடன் ஒப்பிடுகையில் இந்த தொகை குறைவானதாக இருப்பதாக சிலர் வாதிடலாம். ஆனால் கல்வி பொதுப்பட்டியலில் உள்ள நிலையிலும் அதன் முக்கியத்துவம் கருதி மத்திய அரசு தொடர்ந்து அதற்கான ஒதுக்கீட்டில் அதிக கவனம் செலுத்தி வருவது கல்வியை ஊக்குவிப்பது அரசின் முதன்மையான பணியாக உள்ளதை எடுத்துக்காட்டுகிறது.

தனியார் கூட்டாண்மை வாயிலாக ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மூலம் ரூ.20,000 கோடி பட்ஜெட்டில் சிறப்பு ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, ஐஐடி & ஐஐஎஸ்சியில் 10,000 ஆராய்ச்சியாளர்களை உருவாக்கிட பிரதமரின் ஆராய்ச்சி உதவித்தொகைக்காக ரூ.600 கோடி (இரண்டு மடங்கு) ஒதுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு திட்டங்கள், உள்கட்மைப்பு விரிவாக்க திட்டங்கள் மற்றும் மாணவர் சேர்க்கையை படிப்படியாக அதிகரிப்பதற்காக ரூ.1,000 கோடி செலவிடப்பட உள்ளது.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கல்வியில் சிறந்து விளங்குவதற்கான மையங்களை நிறுவுவதற்காக ரூ.500 கோடி, தொழில் பயிற்சிக்காக ரூ.1,180 கோடி (சுமார் 200% அதிகரிப்பு), திறன் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் ஐடிஐ-யை மேம்படுத்த ரூ.3,300 கோடி (300% அதிகரிப்பு), பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டத்துக்கு ரூ.10,800 கோடி (500% அதிகரிப்பு) என பல்வேறு ஒதுக்கீடுகள் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்துக்காக பிரத்யேக திட்டங்களில் ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அரசின் இந்த நடவடிக்கை இந்தியாவுக்காக தயாரிப்போம், உலகுக்காக தயாரிப்போம் என்ற லட்சியங்களுக்கு இந்திய இளைஞர்களை தூண்டுவதற்கு உறுதுணையாக இருக்கும்.

கல்வியைப் பொருத்தவரையில் புதிய தொழில்நுட்ப அறிவை உருவாக்குவது முதல் திறமைக்கான தொழிற்கல்வி வரையில், கல்வி மதிப்பு சங்கிலியை உருவாக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் திட்டங்கள் வரிசையாக இடம்பெற்றுள்ளன.

தேசிய கல்விக் கொள்கை (என்இபி-2020) பல்துறை கல்வியை இலக்காக கொண்டிருந்தாலும், இந்த பட்ஜெட் கல்விக்காக பல அமைச்சகங்களின் ஒதுக்கீட்டை இலக்காக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

உலக பொருளாதார அமைப்பின் எதிர்கால வேலைவாய்ப்பு அறிக்கை 2025-ன் கூற்றுப்படி, ஏஐ , தகவல் தொழில்நுட்ப செயலாக்க தொழில்நுட்பங்கள், ரேபோக்கள், தன்னாட்சி அமைப்புகள், எரிசக்தி உற்பத்தி, சேமிப்பு மற்றும் விநியோகம், புதிய பொருட்கள், காம்போசைட்ஸ், செமிகண்டக்டர் மற்றும் கம்ப்யூட்டிங் ஆகியவை எதிர்கால வணிக மாற்றங்களை தூண்டும் மற்றும் திறமையான இன்றைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் களமாக இருக்கும் என்று கணித்துள்ளது. இந்த பட்ஜெட் அதனை நோக்கிய பயணத்துக்கு சரியான பாதையை வகுத்துள்ளது.

– எஸ்.வைத்தியசுப்ரமணியம்,
பிஸினஸ்லைன்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.