திருப்பரங்குன்றம் ஆர்ப்பாட்டத்தில் ஒரு மணி நேரத்தில் பல ஆயிரம் பேர் திரண்டது எப்படி?

மதுரை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்ட ஒரு மணி நேரத்தில் திருப்பரங்குன்றம் மலையை காக்கும் ஆர்ப்பாட்டத்தில் பல ஆயிரம் பேர் திரண்டது காவல்துறைக்கும், அரசியல் கட்சிகளுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. திருப்பரங்குன்றத்துக்கு நேற்று முன்தினம் இந்து அமைப்பினர் செல்வதைத் தடுக்க காவல்துறை மதுரையில் வரலாறு காணாத வகையில் பலத்த பாதுகாப்பு, கடும் கெடுபிடிகளை போலீஸார் செய்திருந்தனர்.

திருப்பரங்குன்றம் மட்டுமின்றி, மதுரை மாவட்டத்தின் அனைத்து எல்லைகளையும் சீல் வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. தீவிர கண்காணிப்பையும் மீறி திருப்பரங்குன்றத்துக்குள் நுழைந்து குழுக்களாக வந்து ஆர்ப்பாட்டங்களை நடத்திய வர்களையும் கைது செய்தனர். சில நூறு பக்தர்கள் மட்டும் அவ்வப் போது கோஷம், போராட்டம் என நடத்தியதை 4 ஆயிரம் போலீஸார் கட்டுப்படுத்தினர்.

இதனால் திருப்பரங்குன்றம் மக்கள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் போலீஸார் போராட் டத்தை முழுமையாக கட்டுப் படுத்தியதாக நிம்மதி பெரு மூச்சு விட்டனர். இந்த சூழலில் ஆர்ப்பாட்ட வழக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. ‘திருப்பரங் குன்றத்தில் திருவிழா நடை பெறுவதால் திருவிழா முடிந்ததும் ஆர்ப்பாட்டம் நடத்தலாம்’ என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையேற்க மறுத்த நீதிபதிகள், ‘அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு. இது கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்தான். இதனால் திருப்பரங்குன்றம் அல்லாமல் வேறு இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கலாம். எந்த இடம் என்பதை சொல்லுங் கள்’ என அரசு தரப்புக்கு உத்தர விட்டனர். ‘நான்கு பக்கமும் சுற்றுச்சுவருடன் அமைந் திருக்கும் மதுரை தமுக்கம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கலாம்’ என அரசு தரப்பு கூறியது.

இந்து அமைப்புகளோ, திருப்பரங்குன்றத்துக்கு மிக அருகில் இருக்கும் பழங்கா நத்தத்தில் அனுமதி கோரின. இதை அரசு தரப்பும் ஏற்றது. இதையடுத்து பழங்காநத்தத்தில் மாலை 5 முதல் 6 மணி வரை ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. பெயரளவுக்கு நடந்து முடிந்துவிடும் எனக் கருதிய போலீஸாரும், அதிகாரிகளும் நீதிமன்ற உத்தரவை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆர்ப்பாட்ட வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் போராட்ட நாளில் பகல் 12 மணி யளவில் தொடங்கி மாலை 3.30 மணி வரை நடைபெற்றது. நீதிமன்ற விசாரணையை கண்காணித்துக் கொண்டிருந்த இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் விசாரணை விவரங்களை உடனுக்குடன் சமூக வலைதளங்கள் வழியாக பகிர்ந்தனர். ஒரு மணி நேரம் அனுமதி கிடைத்ததை தெரிந் ததும் பலருக்கும் உற்சாகம் பிறந்தது.

ஏற்கெனவே பல்வேறு ஊர்களிலும் இருந்து திருப்பரங் குன்றம் நோக்கி புறப்பட்டு, காவல்துறையினரின் தடுப்பு நடவடிக்கைகளால் பல்வேறு இடங்களிலும் தனித்தனி குழுக்களாக செய்வதறியாது திகைத்தபடி காத்திருந்தனர். ஆர்ப்பாட்டம் மாலையில்தான் திட்டமிடப்பட்டிருந்ததால் அதற்குள் ஏதாவது நடக்காதா என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் இருந்தது. அனுமதி கிடைத்த தகவல் கிடைத்த மறுநிமிடமே பழங்காநத்தம் நோக்கி வரத் தொடங்கினர்.

மேலும் கைது செய்யப்பட்டவர் களையும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதால் உற்சாகமடைந்து அருகிலுள்ள ஊர்களில் இருந்தும் உடனடியாக வரத் தொடங்கினர். இதுதவிர ஆன்மிக ஈடுபாடுள்ள பெண்கள், ஆண்கள் உட்பட உள்ளூர் பொதுமக்களும் தன்னெழுச்சியாக குவிந்தனர். இதனால் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக முடிவடைந்தது. 1 மணி நேரத்தில் பல்லா யிரக்கணக்கானோர் குறிப்பாக பெண்கள் அதிகளவில் ஒரே இடத்தில் கூடியுள்ளனர்.

கட்சிக் கூட்டங்கள், போராட்டங் களுக்கும் பணம், உணவு கொடுத்து ஆட்களை வாகனங் களில் அழைத்து வந்து திரட்ட வேண்டிய நெருக்கடி சூழல் இருந்துவரும் நிலையில், திருப்பரங்குன்றம் மலை காக்கும் போராட்டத்துக்காக பழங்கா நத்தத்தில் பல ஆயிரம் பேர் திரண்டது காவல்துறைக்கும், அரசியல் கட்சிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த அளவுக்கு உணர்வுகள் வெளிப்படும் என சற்றும் எதிர்பார்க்காததே அதிர்ச்சிக்கு காரணமானது.

உணர்ச்சி மிகுந்த கூட்டத்தை பார்த்து போலீஸார் மலைத்துப் போனார்கள். இதற்கான காரணங்களை பக்கம், பக்கமாக தலைமைக்கு அறிக்கை அனுப்பி வருகின்றனர். இதில், உளவுத்துறை உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை கணிப்புகளும் பொய்த்துப் போயின.

இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிலர் கூறுகையில், போலீஸார் காட்டிய கெடுபிடியே எங்களுக்கு பெரிய வெற்றியை தந்துவிட்டது. மக்களிடம், குறிப்பாக முருக பக்தர்களிடம் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்திவிட்டது. இதனால் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்ற ஒரே எழுச்சியு டன் குவிந்த கூட்டம்தான் அது.

இனிமேல் இந்த விஷயத்தில் எவ்வளவு ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும் என்பதை அரசுக்கும், காவல்துறைக்கும் மிக நன்றாக உணர்த்தியுள்ளது. காலையில் அவ்வளவு கெடுபிடி காட்டிய காவலர்கள் மாலையில் காவலுக்கு வேடிக்கை வைத்துவிட்டார் முருகன் என்பதே யதார்த்தம். அனைத்தையும் மீறி தெய்வ சக்திதான் அவ்வளவுக்கும் மூலக்காரணம்’ என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.