டில்லி: அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறியவர்கள், கை கால்களில் சங்கிலி பிணைக்கப்பட்டு, இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதுகுறித்து மதியம் 2மணிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. அன்றையதினம், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். பார்லிமென்டில் […]