சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் ஆஸ்திரேலிய முக்கிய வீரர் ஓய்வு – கேப்டன்ஸியிலும் சிக்கல்!

Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் வரும் பிப்.19ஆம் தேதி தொடங்கி, மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவின் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும், மற்ற அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானின் 3 மைதானங்களில் நடைபெறும்.

ஐசிசி உலகக் கோப்பை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி உள்பட இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் மட்டுமே இந்த தொடருக்கு தகுதிபெற்றுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் முதல் குரூப்பிலும், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் 2வது குரூப்பிலும் விளையாடுகின்றன.

Champions Trophy 2025: மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஓய்வு அறிவிப்பு

அந்த வகையில், பலரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை எதிர்பார்த்திருந்த வேளையில் ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிற்கே பெரும் அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ், தற்போது திடீரென ஒருநாள் தொடரில் ஓய்வு (Marcus Stoinis ODI Retirement) பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.

Marcus Stoinis: வாழ்வின் அடுத்த கட்டம்

ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட் விளையாடுவது ஒரு அற்புதமான பயணமாக இருந்து வருகிறது, மேலும் நான் ஒருநாள் அணியில் கழித்த ஒவ்வொரு தருணத்திற்கும் நன்றியுள்ளவனாக இருப்பேன். எனது நாட்டை மிக உயர்ந்த மட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவது நான் எப்போதும் போற்றும் ஒன்று.

ஓய்வை அறிவிப்பது எளிதான முடிவு அல்ல, ஆனால் ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகி எனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தில் முழுமையாக கவனம் செலுத்த இதுவே சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன். ஆண்ட்ரூ மெக்டொனால்ட் (பயிற்சியாளர்) உடன் எனக்கு அருமையான உறவு உள்ளது. மேலும் அவரது ஆதரவை நான் மிகவும் பாராட்டுகிறேன். பாகிஸ்தானில் எங்கள் அணியினரை நான் தொடர்ந்து உற்சாகப்படுத்துவேன்” என பேசி உள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே மார்கஸ் ஸ்டோய்னிஸ் விளையாடி வருகிறார். அதில் ஒருநாள் அரங்கில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். 71 போட்டிகளில் 26.69 சராசரியில் 1495 ரன்களை அடித்துள்ளார், 48 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

Champions Trophy 2025: ஆஸ்திரேலியா கேப்டன் யார்?

ஆஸ்திரேலிய அணியில் ஏற்கெனவே, பாட் கம்மின்ஸ் காயத்தில் இருந்து முழுமையாக உடற்தகுதி பெறாத நிலையில், அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதும் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், ஸ்டீவ் ஸ்மித் அல்லது டிராவிஸ் ஹெட் இருவரில் ஒருவர் கேப்டன் பொறுப்பை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

IND vs ENG: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருக்குது சர்ப்ரைஸ் – பலி ஆடு யார்?

இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட பும்ரா! பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு!

Live News: இன்றைய முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட்கள் படிக்க… இதை கிளிக் பண்ணுங்க!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.