Virat Kholi, India Playing XI | இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஏன் முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை என்ற காரணத்தை கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். அது என்ன காரணம் என்பது உள்ளிட்ட முக்கிய காரணங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி தொடர் இன்று தொடங்கியது. நாக்பூர் விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் விளையாடக்கூடிய இந்த போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி கேப்டன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இப்போட்டிக்கான இந்திய அணியில் விராட் கோலி, ரிஷப் பந்த் இருவரும் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டனர். இந்த இரண்டு முக்கிய பிளேயர்கள் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்ட முக்கிய காரணமும் அதன் பின்னணியையும் இங்கே பார்க்கலாம்.
விராட் கோலி நீக்கம் ஏன்?
விராட் கோலி அண்மையில் டெல்லி அணிக்காக ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடினார். சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் களமிறங்கினார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து பிசிசிஐ அனைத்து சர்வதேச கிரிக்கெட் பிளேயர்களும் ரஞ்சி டிராபி விளையாட வேண்டும் என அறிவுறுத்தியது. அதனடிப்படையில் டெல்லி அணிக்காக விளையாடிய அவர் பேட்டிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை. இந்த சூழலில் இந்திய அணியில் இருந்தும் இப்போது நீக்கப்பட்டிருக்கிறார்.
முழங்கால் வலி பிரச்சனை காரணமாகவே விராட் கோலி இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டதாக கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் கொடுத்திருக்கிறார். உண்மையில், விராட் கோலி உள்ளிட்ட சீனியர் பிளேயர்களுக்கு பதில் இளம் வீரர்களை அந்த இடத்தில் விளையாட வைக்க வேண்டும் என்பதே இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் எண்ணம். அதனால் 5 போட்டிகள் கொண்ட தொடர் என்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் இளம் பிளேயர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காகவே விராட் கோலி முதல் போட்டியில் வெளியே உட்கார வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் ரசிகர்கள் கருதுகின்றனர்.
ரிஷப் பந்த் நீக்கம் ஏன்?
இதேபோல் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறாத இன்னொரு பிளேயர் ரிஷப் பந்த். அவர் டெஸ்ட் போட்டிக்கு மட்டுமே இந்திய அணியின் விக்கெட் கீப்பர் போட்டியில் முன்னணியில் இருக்கிறார். டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன், கேல்எல் ராகுல் மட்டுமே பிரதான தேர்வாக உள்ளனர். அதனடிப்படையிலேயே கேஎல் ராகுல் தேர்வு செய்யப்பட்டு, ரிஷப் பந்த் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டுள்ளார். எனினும் கேஎல் ராகுலின் ஆட்டத்தைப் பொறுத்து அடுத்தடுத்த போட்டிகளில் ரிஷப் பந்துக்கு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் : ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மான் கில், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது ஷமி
மேலும படிக்க | சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் ஆஸ்திரேலிய முக்கிய வீரர் ஓய்வு – கேப்டன்ஸியிலும் சிக்கல்!
மேலும் படிக்க | IND vs ENG: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருக்குது சர்ப்ரைஸ் – பலி ஆடு யார்?