ILT20 2025 Play Off: ஐபிஎல் தொடர் போன்ற டி20 லீக் கிரிக்கெட் தொடர்கள் தற்போது பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன. கால்பந்தை போன்று கிரிக்கெட்டும் உலகளாவிய அளவில் பரந்துவிரிய இந்த டி20 லீக் தொடர்களே பெரிதும் உதவுகின்றன எனலாம்.
ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதத்திலும், சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்த பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியிலும் தொடங்க இருக்கும் நிலையில், கடந்த ஜனவரியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ILT20 (International League T20) தொடரின் மூன்றாவது சீசன், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இந்த தொடரை எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது.
ILT20 தொடர்: வரவேற்பை பெற்ற மூன்றாவது சீசன்
இந்த தொடரில் மொத்தம் 6 அணிகள் விளையாடி வருகின்றன. அபுதாபி நைட் ரைடர்ஸ், டெஸர்ட் வைப்பர்ஸ், துபாய் கேப்பிடல்ஸ், கல்ஃப் ஜெய்ன்ட்ஸ், எம்ஐ எமிரேட்ஸ், சார்ஜா வாரியர்ஸ் ஆகிய அணிகள் விளையாடுகின்றன. 2023ஆம் ஆண்டு நடந்த முதல் சீசனில் கல்ஃப் ஜெயன்ட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 2024ஆம் ஆண்டு இரண்டாவது சீசனில் எம்ஐ எமிரேட்ஸ் அணி சாம்பியன் ஆனது.
இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜன. 11ஆம் தேதி அன்று ILT20 தொடரின் மூன்றாவது சீசன் தொடங்கியது. இந்த தொடரின் லீக் சுற்றில், ஒவ்வொரு அணியும் மற்ற 5 அணிகளுடன் தலா 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்குச் செல்லும்.
ILT20 தொடர்: 189 ரன்களை குவித்த டெஸர்ட் வைப்பர்ஸ்
கடந்த பிப். 3ஆம் தேதியுடன் லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில், கல்ஃப் ஜெய்ன்ட்ஸ், அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் லீக் சுற்றோடு வெளியேறின. டெஸர்ட் வைப்பர்ஸ், துபாய் கேப்பிடல்ஸ், எம்ஐ எமிரேட்ஸ், சார்ஜ் வாரியர்ஸ் ஆகிய நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.
இந்நிலையில், நேற்று நடந்த குவாலிஃபயர் 1 போட்டியில் லாக்கி பெர்குசன் தலைமையிலான டெஸர்ட் வைப்பர்ஸ் – சாம் பில்லிங்ஸ் தலைமையிலான துபாய் கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற துபாய் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. டெஸர்ட் வைப்பர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 189 ரன்களை குவித்தார்.
அதிகபட்சமாத அலெக்ஸ் ஹெல்ஸ் 67, மேக்ஸ் ஹோல்டன் 36, டான் லாரன்ஸ் 35, சாம் கரன் 24 ரன்களை குவித்தார். துபாய் பந்துவீச்சில் கைஸ் அகமது மற்றும் குல்புதீன் நைப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ILT20 தொடர்: கடைசி ஓவரில் த்ரில் வெற்றி
190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய துபாய் அணி கடைசி வரை போராடி இலக்கை அடைந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. துபாய் அணியில் அதிகபட்சமாக குல்புதீன் நைப் 62, ஆடம் ரோசிங்டன் 44, சாம் பில்லிங்ஸ் 38 ரன்களையும் குவித்தனர். கடைசி ஓவரில் 12 ரன்களை தேவைப்பட்டது. கேப்டன் பெர்குசன் பந்துவீச வந்தார். அந்த ஓவரின் முதல் பந்து வைடாக வீசப்பட்டது. மீண்டும் வீசப்பட்ட முதல் பந்தில் 2 ரன்களையும், 2வது பந்தில் பவுண்டரியும் அடித்தார் குல்புதீன்.No Look Six, phew!
Alex Hales picked the bones out of that one, smashing a huuuuuge six and taking home the #PlayOfTheGame#Qualifier1 #DPWorldILT20 #TheFinalPush #AllInForCricket pic.twitter.com/QDEtUK15K3
— International League T20 (@ILT20Official) February 5, 2025
தொடர்ந்து 3வது பந்தில் லாங் ஆனில் தூக்கி அடிக்க கேட்ச் தவறவிடப்பட்டது. அதிலும் 2 ரன்கள் குல்புதீன் நைப் எடுத்தார். 4வது பந்திலும் 2 ரன்கள் எடுத்த நிலையில், ஸ்கோர் சம நிலைக்கு வந்தது. 5வது பந்தில் குல்புதீப் அவுட்டாக ஆட்டம் பரபரப்பானது. கடைசி பந்தில் 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், சிக்கந்தர் ராஸா களமிறங்கி பவுண்டரி தனது அணிக்கு வெற்றியை தேடி தந்தது மட்டுமின்றி, இறுதிப்போட்டிக்கு தகுதிபெற வைத்தார். குல்புதீன் நைப் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
That’s a wrap!
And Dubai Capitals end the night as the FIRST FINALIST!
A complete performance for the Capitals to close the game and take home the spoils of victory & have one hand on the
Finals inyears for the lads.#Qualifier1 #DPWorldILT20 #TheFinalPush… pic.twitter.com/zsdRcEp76P
— International League T20 (@ILT20Official) February 5, 2025
ILT20 தொடர்: பரபரப்பான பிளே ஆப் சுற்று
இன்று நிக்கோலஸ் பூரன் தலைமையிலான எம்ஐ எமிரேட்ஸ் அணியும், டிம் சௌதி தலைமையிலான சார்ஜா வாரியர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி, நாளை நடைபெறும் இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணியுடன் மோதும். இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது.
ILT20 தொடர்: எங்கு, எப்போது நேரலையில் பார்க்கலாம்?
&Pictures SD, &Pictures HD, Zee Cinema HD, Zee Anmol Cinema 2, Zee Action, Zee Biskope, Zee Zest SD, Zee Cinemalu HD, Zee Telugu HD, Zee Thirai, Zee Tamil HD, Zee Kannada HD, Zee Zest HD, &Flix SD மற்றும் &Flix HD என ZEE நிறுவனத்தின் 15 தொலைக்காட்சி சேனல்களில் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த அதிரடி தொடரை நேரலையில் காணலாம். இந்தியாவின் முன்னணி OTT தளங்களில் ஒன்றான ZEE5 தளத்திலும் இந்த தொடரை நீங்கள் இலவசமாகப் பார்க்கலாம். இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கும். இறுதிப்போட்டி மட்டும் இரவு 7.30 மணிக்கு தொடங்க இருக்கிறது.