ஆனந்த விகடனில் வெளிவந்த வீரயுக நாயகன் வேள்பாரி இப்போது ஆடியோ வடிவில் Vikatan Playல் வெளியாகி உள்ளது.
வேள்பாரி
வேள்பாரி தொடரின் முதல் அத்தியாயம் ஆனந்த விகடனின் 2016ஆம் ஆண்டு தீபாவளி சிறப்பிதழில் வெளியானது. 111 அத்தியாயங்களாக வெளிவந்த இத்தொடர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது.
அந்த சமயத்தில் வெளியான ஒரு நேர்காணலில், “வேள்பாரி தொடரை முதலில் எழுத ஆரம்பித்தபோது 50-55 வாரங்கள் வரைதான் வருமென நினைத்தேன். ஆனால், 50 வாரங்களைத் தாண்டியபோது பாதிக் கதைகூட முடியவில்லை. வாசகர்களின் வரவேற்பும் இருந்ததால், விகடனிலும் தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்தினார்கள். இப்போது 100வது வாரத்தை எட்டியுள்ளது” என்று வேள்பாரி தொடரின் ஆசிரியரும் சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளருமான சு. வெங்கடேசன் கூறி இருந்தார்.
![சு. வெங்கடேசன்](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/Su-Vae.png)
புத்தகமாகச் சாதனையும், திரைப்பட முயற்சியும்
பின்னர் புத்தகமாக வெளிவந்த போதும் லட்சம் பிரதிகள் விற்பனையாகிப் புது சாதனை படைத்தது.
இயக்குநர் ஷங்கர் இந்த வரலாற்றுப் புதினத்தைத் திரைப்படமாக்கும் பணிகளைத் தொடங்கி உள்ளார்.
ஒரு நேர்காணலில் கொரோனா சமயத்தில் வேள்பாரியைப் படித்ததாகக் கூறி இருந்தார் இயக்குநர் ஷங்கர்.
அவர், “கொரோனா சமயத்தில் வேள்பாரியைப் படிக்கத் தொடங்கினேன் படிக்கப் படிக்க எனக்குக் காட்சிகளாக மனதில் விரிந்தது. இதை எப்படியாவது படமாகப் பண்ணணும்னு தோன்றியது. உடனே அதை எழுதிய சு.வெங்கடேசன்கிட்ட பேசி, அதுக்கான ரைட்ஸ் வாங்கி , 3 பார்ட்டாக திரைக்கதை எழுதி முடிச்சுட்டேன். ரெடியா இருக்கு. யார் நடிக்கிறாங்க அப்படிங்கறதை முடிவு பண்ணவில்லை.” என்று கூறி இருந்தார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/VikatanPlayVealPaariFBBanner820x360opt4.png)
இப்போது Audio Bookஆக
இப்படியான சூழலில் Vikatan Play வேள்பாரியை Audio Bookஆக வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக Vikatan Play டீம், “உண்மையில் மிக வியப்பாக இருக்கிறது. தொடராக வெளிவந்த போதும், புத்தகமாக வெளிவந்த போதும் மிகப்பெரிய ஆதரவை மக்கள் வேள்பாரிக்கு அளித்தனர். இப்போது vikatan Playக்கும் அதே அளவு ஆதரவை அளித்துள்ளனர். வேள்பாரி பிரசுரம் ஆகிய சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இதனைக் கேட்டு இருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் இது லட்சத்தைத் தொடும் என் எதிர்ப்பார்க்கிறோம்” என்றனர்.
வேள்பாரியை ஆடியோ வடிவில் கேட்க இங்கே க்ளிக் செய்யவும்
![வேள்பாரி](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/வேள்பாரி.png)
FAQ
Vikatan Play என்றால் என்ன?
இது Vikatan App அறிமுகப்படுத்தி உள்ள புது Feature. நூற்றாண்டை நோக்கிப் பயணிக்கும் விகடன் குழுமம் தமிழ வாசகர்களுக்காகக் கொண்டுவந்துள்ள புது Feature இது. இதில் விகடனில் வெளிவந்த சிறுகதைகள், சிறப்புத் தொடர்கள், நட்சத்திர எழுத்தாளர்களின் புதினங்கள், கட்டுரைகள் மற்றும் சில Exclusiveகளை ஆடியோ Formatல் கேட்கலாம்
இந்த ஆடியோ புத்தகங்களைக் கேட்க என்ன செய்ய வேண்டும்?
Vikatan Appஐ Download செய்து அதில் Vikatan Play iconஐ க்ளிக் செய்ய வேண்டும்.
Vikatan Playஐ கேட்க கட்டணம் செலுத்த வேண்டுமா?
இல்லை. இலவசமாக கேட்கலாம்.
வேறு என்னென்ன புத்தகங்கள் இருக்கின்றன?
மதனின் வந்தார்கள் வென்றார்கள், இயக்குநர் பாலாவின் இவன் தான் பாலா, நா. முத்துக்குமாரின் அணிலாடும் முன்றில், எழுத்தாளர் இந்திரா செளந்தராஜனின் கோட்டைப்புரத்து வீடு, இயக்குநர் ராஜூமுருகனின் வட்டியும் முதலும், இயக்குநர் மாரி செல்வராஜின் சம்படி ஆட்டம், மறக்கவே நினைக்கிறேன், நரனின் வேட்டை நாய்கள், பராரிகள் ஏழு கடல் ஏழு மலை, விகடன் சிறப்பு சிறுகதைகள், அ. வெண்ணிலாவின் நீரதிகாரம் என நூற்றுக்கணக்கான Audio புத்தகங்கள் இப்போது Vikatan Playல் இருக்கிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/கோட்டைப்புரத்து-வீடு.png)
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/சித்தம்-சிவம்-சாகசம்.png)
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/போராட்டங்களின்-கதை.png)
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/வேட்டை-நாய்கள்.png)
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/Literature-10.png)
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/பாபாயணம்.png)
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/ஒரு-கனவின்-இசை.png)
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/காமத்துக்கு-மரியாதை.png)
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/வைகை-நதி-நாகரிகம்.png)
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/முந்திரிக்காடு-டூ-சந்தனைக்காடு.png)