சாம்பியன்ஸ் டிராபில் பும்ரா விளையாடுவாரா? வெளியான தகவல்!

Jusprit Bumrah Injury Update: இந்திய அணியின் முக்கிய பந்து வீச்சாளராக மட்டுமல்லாமல் உலகின் நம்பர் ஒன் பவுலராக திகழ்ந்து வருபவர் ஜஸ்பிரித் பும்ரா. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஓர் அளவுக்கு ஆஸ்திரேலியா அணிக்கு டஃப் கொடுத்ததற்கு காரணம் ஜஸ்பிரித் பும்ராதான். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் தொடரின் போது, அவருக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஓய்வுக்கு திரும்பினார். 

இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான முன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டு போட்டிகளில் பும்ரா விளையாட மாட்டார். அவருக்கு 5 வாரங்கள் ஓய்வு தேவைப்படுவதால் இதில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக அறிவிக்கப்பட்டிருந்த இந்திய அணியில் பும்ராவின் பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால் அவர் விளையாடுவாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.

மேலும் படிங்க: விராட் கோலி இந்திய அணியில் இருந்து நீக்கம்? இதுதான் காரணம்..! 

சாம்பியன்ஸ் டிராபியில் பும்ராவுக்கு மாற்று வீரராக அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்றும் வெளிப்படையாக ரோகித் சர்மா தெரிவித்திருந்தார். மேலும், சமீபத்தில் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் கூட, பும்ரா பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்கிறார். அவரது காயம் குறித்து அறிக்கைகள் வெளியாகும். அதை பெருத்தே அவர் விளையாடுவாரா மாட்டாரா என உறுதியாக தெரிவிக்க முடியும் என தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், ஜஸ்பிரித் பும்ரா ஸ்கேன் பரிசோதனை மற்றும் அவரது காயம் குறித்து முழு விபரம் குறித்த மருத்துவ அறிக்கை அடுத்த 24 மணி நேரத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மருத்துவக் குழு தங்களது பணியை முடித்தவுடன் இறுதி அறிக்கை இந்திய அணி நிர்வாகத்திற்கு பகிரப்படும். மேலும், அறிக்கை தயாரான பிறகு நியூசிலாந்தை சேர்ந்த ரோவன் ஷூட்டனின் கருத்தையும் கேட்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.  

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விகீ), ரிஷப் பந்த் (விகீ), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்

மேலும் படிங்க: சஞ்சு சாம்சனுக்கு சப்போர்ட் செய்து சிக்கலில் சிக்கிய ஸ்ரீ சாந்த் – கேசிஏ எச்சரிக்கை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.