கவுரா நமோடா நைஜீரிய நாட்டில் பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் பலியாகி உள்ளனர். நைஜீரிய நாட்டில் உள்ள சம்பாரா மாகாணம் கவுரா நமோடா நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய மதப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் விடுதியில் தங்கி மதப்பாடம் பயின்று வருகின்றனர். நேற்று முன்தினம், இரவு இந்தப் பள்ளி விடுதியில் திடேரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் விடுதியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி இருந்தனர். விபத்து குறித்து […]