கோவை மத்திய சிறையில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் இருக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஏசுதாஸ் என்ற கைதி கடந்த ஜனவரி 27-ம் தேதி சிறை வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அவரின் கழுத்து எலும்பு முறிந்த நிலையில், அது கொலையா.. தற்கொலையா என்று பல்வேறு சந்தேகங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதுதொடர்பாக சிறை அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
தற்போது கோவை மத்திய சிறையில் மற்றொரு சர்ச்சை வெடித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விக்ரம் என்ற நபர் இரட்டை கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார். விக்ரம் இன்று தன் வழக்கறிஞரிடம் வீடியோ கால் மூலம் பேசியுள்ளார். அதில் அவர், “இங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.
என்னுடன் இருந்தவனை கொன்றுவிட்டார்கள். அடுத்து நான் தான். எனக்கு என்ன நடந்தாலும் கிருபாகரன், சதீஷ், பாலு, மோகன் ராம் ஆகியோர் தான் காரணம். என்னை எப்போது கொல்வார்கள். என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை.” என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் அளித்துள்ள விளக்கத்தில், “பொதுவாக சிறை கைதிகள் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 120 நிமிடங்கள் வீடியோ கால் பேசுவதற்கு தமிழ்நாடு அனுமதி வழங்கி உள்ளது.
விக்ரம் தன் வழக்கறிஞரிடம் தவறான தகவல்களை சொல்லி சமூகவலைதளங்களில் பரப்பியுள்ளார். சிறையில் அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை. தவறான தகவல்களை பரப்பியதால் விக்ரம் மற்றும் அவரது வழக்கறிஞர் மீது புகாரளித்துள்ளோம்.” என்று கூறியுள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs