சஞ்சு சாம்சனுக்கு சப்போர்ட் செய்து சிக்கலில் சிக்கிய ஸ்ரீ சாந்த் – கேசிஏ எச்சரிக்கை

Sreesanth Sanju Samson controversy | கேரள கிரிக்கெட் சங்கம் அண்மைக்காலமாக லைம்லைட்டில் சிக்கியுள்ளது. விஜய் ஹசாரே போட்டியில் சஞ்சு சாம்சன் கேரள அணிக்கு விளையாட விருப்பம் தெரிவித்தும், அவர் பயிற்சிக்கு வராத காரணத்தால் அந்த தொடருக்கான கேரள அணியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. கட்டாயம் பயிற்சியில் கலந்து கொண்டால் மட்டுமே கேரள அணியில் வாய்ப்பு கொடுக்கப்படும் என கேரளா கிரிக்கெட் சங்கம் தெரிவித்துவிட்டது. இதனால் விஜய் ஹசாரே போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடததால், இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இதனால் கடுப்பான இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் கேரள கிரிக்கெட் சங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்திய அணிக்காக விளையாடக்கூடிய பிளேயர்களை கேரளா கிரிக்கெட் சங்கம் பாதுகாக்கவில்லை என தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில் ஸ்ரீசாந்த் பேசும்போது, “சஞ்சு சாம்சன் இந்திய அணியில் அதிக வாய்ப்புகளை பெற வேண்டும், ஆனால் கேரளா கிரிக்கெட் அசோஷியேஷன் (KCA) அவருக்கு முழு ஆதரவு தரவில்லை” என்று குற்றம்சாட்டினார்.

இப்படியான அணுகுமுறையால் தான் இந்திய அணிக்கு சஞ்சு சாம்சனுக்குப் பிறகு இந்திய அணிக்கு விளையாடக்கூடிய வகையில் ஒரு பிளேயரை கூட கேரளா கிரிக்கெட் சங்கம் உருவாக்கவில்லை என்றும் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். இதற்கு கேரளா கிரிக்கெட்சங்கம் கடும் கோபமடைந்துள்ளது. அத்துடன் ஸ்ரீசாந்த்துக்கு காட்டமான பதில் அறிக்கை ஒன்றையும் கொடுத்திருக்கிறது. அதில், “கேரளா கிரிக்கெட் சங்கம் சஞ்சு சாம்சனை மட்டுமல்ல இன்னும் பல பிளேயர்களை உருவாக்கியுள்ளோம், ஸ்ரீசாந்தின் குற்றாச்சாட்டுகளை பார்க்கும்போது அவரின் புரிதல் குறைவாக இருப்பதையே காட்டுகிறது. நாங்கள் தற்போது இந்திய அணிக்காக பலரை உருவாக்கியுள்ளோம். சஞ்சனா சஜீவன், மின்னுமணி, ஆசா சோபனா, முகமது இனாம் போன்றோர் கேரளா கிரிக்கெட் சங்கம் உருவாக்கியள்ள இளம் பிளேயர்கள்” என தெரிவிதுள்ளது. 

மேலும், ” 2013 IPL சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்த் இன்னும் முற்றிலும் விடுதலை பெறவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட பின்னரே BCCI அவரை ஆயுள் தண்டனை விதித்தது. ஸ்ரீசாந்த் ஐபிஎல் சூதாட்ட வழக்கில் சிறையில் இருந்தபோது, நாங்களே அவரை சந்தித்து ஆதரவு அளித்தோம். அதனால், KCA-வை விமர்சிக்கும்போது அவர் சிந்தித்து பேச வேண்டும். ஸ்ரீசாந்த் தவறான தகவல்களை பரப்புகிறார் என்பதற்காக அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இன்னும் இப்படி நடந்தால் சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் கேரளா கிரிக்கெட் சங்கம் எச்சரித்துள்ளது.

ஸ்ரீ சாந்த் – சஞ்சு சாம்சன் நட்பு

இந்திய அணிக்காக கேரளாவில் இருந்து முத்திரை பதித்த பிளேயர் என்றால் அது ஸ்ரீசாந்த் தான். அவர் முதன்முறையாக 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக்ககோப்பை போட்டியில் இந்திய அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். வேகப்பந்துவீச்சாளராக அந்த தொடர் முழுவதும் ஜொலித்தார். அதன்பின்னர் 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்தவர் ஸ்ரீசாந்த். அந்த தொடரிலும் அற்புதமாக விளையாடினார். அதன்பின் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடினார். அந்த அணியில் கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சனையும் ஏலம் எடுக்க உதவினார் ஸ்ரீசாந்த். அப்போது முதல் இருவருக்கும் இடையிலான நட்பு தொடர்கிறது.

ஸ்ரீசாந்த் பொறுத்தவரை ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் சிக்கி இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆயுள் தடை பெற்றார். பின்னர் நீதிமன்றம் மூலம் நிவாரணம் பெற்று உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.