புதுடெல்லி,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் மார்ச் 21-ம் தேதி தொடங்க உள்ளது.10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக ( கடந்த நவம்பர் 24 & 25-ம் தேதிகளில்) நடைபெற்றது.
இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர். இந்த வருட ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் செயல்பட உள்ளார்.
இந்நிலையில், ராஜஸ்தான் அணிக்கு புதிய சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்திய முன்னாள் வீரரான சாய்ராஜ் பஹுதுலே நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சாய்ராஜ் பஹுதுலே இந்திய அணிக்காக 2 டெஸ்ட் மற்றும் 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்சிஏ) பணியாற்றிய சாய்ராஜ் பஹுதுலே சில தினங்களுக்கு முன்னர் அந்த பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.