நேபிடோவ்,
மியான்மர், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை என கூறி மோசடி கும்பல்கள் வெளிநாட்டவரை ஏமாற்றுகின்றன. இதனை உண்மை என நம்பி பலரும் அங்கு சென்று மோசடியில் சிக்குகின்றனர்.
அந்தவகையில் மோசடி நிறுவனங்களில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பலர் சிக்கிக்கொண்டனர். இந்த மோசடி நிறுவனங்களில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மியான்மர் அரசுடன் இணைந்து மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், மோசடி நிறுவனத்தில் சிக்கி தவித்த 13 இந்தியர்கள், 39 சீனர்கள் உள்பட 61 பேரை மியான்மர் அரசாங்கம் மீட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் தங்களது தாயகத்துக்கு பத்திரமாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.