BADGIRL: விருது வென்ற வெற்றிமாறன் உதவியாளர் படம்; திரைப்பட விழாவில் கவன ஈர்ப்பு!

வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து வழங்கும் `பேட் கேர்ள்’ திரைப்படம் இந்தாண்டு ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

இப்படத்தை அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கியிருக்கிறார். அங்கு இத்திரைப்படம் `NETPAC’ என்கிற உயரிய விருதை வென்றிருக்கிறது.

இந்த `NETPAC’ விருது ஆசிய மற்றும் பசிபிக் பகுதிகளிலிருந்து தேர்வாகும் திரைப்படங்களுக்கு வழங்கப்படுகிறது. இயக்குநர்களின் முதல் அல்லது இரண்டாவது படைப்புகளை மட்டுமே பரிசீலித்து இந்த விருது வழங்கப்படும். அப்படி இயக்குநர் வர்ஷா பரத்தின் முதல் திரைப்படமான இந்த `பேட் கேர்ள்’ படத்திற்கு இந்த கெளரவ விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்த `NETPAC’ விருதை `விதேயா (Vidheya)’ படத்திற்காக இயக்குநர் அடூர் கோபாலகிருஷண்னும் வென்றிருக்கிறார்.

Bad Girl Movie Poster

இந்தாண்டிற்கான ரோட்டர்டேம் திரைப்பட விழா ஜனவரி 30-ம் தேதி தொடங்கியது. இந்த விழா பிப்ரவரி 8-ம் தேதி (நாளை) வரை நடைபெறுகிறது. இந்தாண்டில் இயக்குநர் ராமின் `பறந்துப் போ’, இயக்குநர் பா.ரஞ்சித்தின் `தங்கலான்’ போன்ற திரைப்படங்களும் லைம்லைட் பிரிவில் திரையிடப்பட்டிருக்கிறது.

அஞ்சலி சிவராமன், டீஜே, சாந்தி ப்ரியா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிற இத்திரைப்படத்திற்கு தேசிய விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் அமித் திரிவேதி இசையமைத்திருக்கிறார்.

VIKATAN PLAY:

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/TATAStoryepi01

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.