சென்னை: வடலூரில் நாளை மறுதினம் (பிப்ரவரி 10ந்தேதி) தைப்பூச பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 11ந்தேதி தைப்பூசம் அன்று ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று கூறிய வள்ளலார் கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூரில் அவதரித்தவர். இவர் பசிப்பிணியை தீர்க்க வடலூரில் சத்திய தருமச்சாலை நிறுவினார். மனத்தூய்மையும், தீய குணங்களும் நீங்கிய மனிதன் ஜீவகாருண்யச் செயல்களால் இறை நிலை அடைய வேண்டும் என்பதே வள்ளலாரின் கோட்பாடு. ஜாதிமத […]