புதுடெல்லி தொகுதியில் 3 முறை வென்ற முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அதிர்ச்சி தோல்வியடைந்தார். அவரை தோற்கடித்து புதுடெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா வெற்றி பெற்றிருக்கிறார்.
டெல்லியை கடந்த மூன்று வருடங்களாக ஆம் ஆத்மி கட்சிதான் ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி டெல்லியில் 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. இதில் அதிக கவனம் பெற்ற தொகுதி புது டெல்லி.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/1r1c1nm8parvesh-verma-arvind-kejriwal625x30004January25.jpg)
அந்தத் தொகுதியில் டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் பர்வேஷ் வர்மா களமிறங்கினார். சுமார் 4000 வாக்கு வித்தியாசத்தில் பர்வேஷ் வர்மா கெஜ்ரிவாலைத் தோற்கடித்து வெற்றி பெற்று இருக்கிறார். பர்வேஷ் வர்மா டெல்லி முதல்வராக வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
![பர்வேஷ் வர்மா](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/IMG_BJP_PC_KEJRIWAL_DELH_2_1_S2AA9HM4.jpg)
வெற்றி பெற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “இந்த வெற்றிக்காக பிரதமர் மோடிக்கும் டெல்லி மக்களுக்கும் நன்றி. மோடியின் தொலைநோக்குப் பார்வையை டெல்லிக்கு கொண்டு வருவோம்” என்று கூறியிருக்கிறார்.