Chennai Super Kings: ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளராக திகழ்பவர் தீபக் சாஹர். ஆனால் இம்முறை நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் அவர் முப்பை அணியால் வாங்கப்பட்டார். இது சிஎஸ்கே ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆனால் அதே மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணியால் இளம் வீரர் அன்ஷுல் கம்போஜ் வாங்கப்பட்டார். அவர் தற்போது ரஞ்சி டிராபி தொடரில் சிறப்பாக பவுலிங் செய்து விக்கெட்களை குவித்து வருவது சிஎஸ்கே ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்து வருகிறது.
உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் அன்ஷுல் கம்போஜ்
2024-2025 ரஞ்சி டிராபி தொடரில் அன்ஷுல் கம்போஜ் ஹரியானா அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை அவர் விளையாடிய 12 இன்னிங்ஸ்களில் 35 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். குறிப்பாக மும்பை அணிக்கு எதிரான கால் இறுதி போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். இந்த தொடரில் அவரது பந்து வீச்சின் சராசரி 12க்கும் குறைவாக உள்ளது. இதுவே ரஞ்சி சீசனில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்து வீச்சாளர்களின் மிகச் சிறப்பான சராசரி ஆகும். அதுமட்டுமின்றி இந்த ஆண்டுதான் அவர் ரஞ்சி டிராபி தொடரில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்களையும் வீழ்த்தி சாதனை புரிந்தார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.
3.40 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட கம்போஜ்
நடந்து முடிந்த 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் அன்ஷுல் கம்போஜ், 3.40 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். கடந்த ஆண்டு தான் இவர் ஐபிஎல்லில் அறிமுகமாகி இருந்தார். அப்போது அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தார்.
இவரது பந்து வீச்சு பற்றி பெரிய அளவிற்கு தெரியாத நிலையில், ரசிகர்களுக்கு தற்போது தான் யார் என காட்டி உள்ளார் அன்ஷுல் கம்போஜ். அவரது உச்சகட்ட ஃபார்மை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவரை சென்னை அணி சரியாக பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி 2025: விளையாடாத நட்சத்திர வீரர்கள்.. முழு பட்டியல் இதோ!
மேலும் படிங்க: Ind vs Eng ODI Series: ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கமா? 2வது போட்டியில் நடக்கப்போகும் மாற்றம்!