லக்னோ: உ.பி.யின் மில்கிபூர் பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
மில்கிபூர் தொகுதியின் சமாஜ்வாதி எம்எல்ஏவாக இருந்த அவதேஷ் பிரசாத் கடந்த ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டார். இதில் பைசாபாத் தொகுதியில் அவர் வெற்றி பெற்று எம்.பி.யானார். இதனால் காலியான மில்கிபூர் தொகுயில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில் பாஜக வேட்பாளர் சந்திர பானு பாஸ்வான் வெற்றி பெற்றுள்ளார். இவர் சமாஜ்வாதி வேட்பாளர் அஜித் பிரசாத்தை 61,710 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.