ரச்சின் ரவீந்திரா காயம்! மைதானத்தில் போதிய வெளிச்சம் இல்லை? சாம்பியன்ஸ் டிராபியில் சிக்கல்?

பாகிஸ்தான், சவுத் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் முத்தரப்பு ஒருநாள் தொடர் நேற்று பாகிஸ்தானில் தொடங்கியது. சாம்பியன்ஸ் டிராபியை முன்னிட்டு இந்த தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகள் விளையாடின. இந்த போட்டியில் நியூஸிலாந்து அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 330 ரன்கள் அடித்தது. க்ளென் பிலிப்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் மிட்சல் சாண்டனர் 3 விக்கெட்களை எடுத்து அசத்தினார்.

— Gurlabh Singh (@Gurlabh91001251) February 8, 2025

சாம்பியன்ஸ் டிராபி

சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில், இந்த சம்பவம் வீரர்களின் பாதுகாப்பின் மீது பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. ரச்சின் ரவீந்திராவின் முகத்தை மூடிய துண்டுடன் அழைத்து சென்றது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. ரவீந்திராவின் இந்த காயம் பாகிஸ்தானில் வீரர்களின் பாதுகாப்பு குறித்த புதிய கேள்வியை எழுப்பி உள்ளது. விளையாட்டின் போது விபத்து ஏற்படுவது சகஜம் என்றாலும் எதனால் ஏற்படுகிறது என்பதை பார்க்க வேண்டும். போதிய வெளிச்சம் தராத மைதானத்தில், வீரர்கள் விளையாடும் போது இப்படி விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது என்ற கேள்விகளை சமூக வலைத்தளங்களில் பலர் எழுப்பி வருகின்றனர்.

சாம்பியன்ஸ் டிராபியை முன்னிட்டு பாகிஸ்தானில் உள்ள மைதானங்கள் சமீபத்தில் தான் சரி செய்யப்பட்டன. அப்படி இருந்தும் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. சாம்பியன்ஸ் டிராபிக்கு வரும் சர்வதேச வீரர்களின் மனதில் இந்த காயம் நிச்சயம் இருக்கும். விளையாடும் போதும், கேட்ச் பிடிக்கும் போது மனதில் வந்து போகும். மற்ற கிரிக்கெட் வாரியங்கள், பாகிஸ்தான் மைதானங்களின் பாதுகாப்பு வசதி குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது கவனிக்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும் படிக்க | Ind vs Eng ODI Series: ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கமா? 2வது போட்டியில் நடக்கப்போகும் மாற்றம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.