கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி 2025 பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்குகிறது. அனைத்து அணி வீரர்களும் இதற்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், இந்திய அணி இத்தொடரில் எப்படி செயல்படும் என்ற சந்தேகமும் எதிர்பார்ப்பும் உள்ளன. முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலியும் பேடிங்கில் சொதப்பி வருகின்றனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கூட கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்னில் ஆட்டமிழந்து சொதப்பி உள்ளார். கடந்த அக்டோபர் 2024 முதல் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இந்த நிலையில், இந்திய அணி குறித்தும் கேப்டன் ரோகித் சர்மா குறித்தும் விமர்சித்து பேசி இருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்.
இது குறித்து கபில் தேவ் பேசுகையில், ரோகித் சர்மா ஒரு பெரிய வீரர். அவர் விரைவில் ஃபார்முக்கு திரும்புவார் என நம்புகிறேன். பயிற்சியாளருக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன். இந்த விஷயம் செட்டில் ஆக நேரம் எடுக்கும். நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்திய அணியின் செயல்திறனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சிறுதி காலமாக இந்திய அணி நன்றாக விளையாடியது. தற்போது இந்திய அணி நிலையற்றதாக தெரிகிறது. இந்திய அணியின் கேப்டனின் ஃபார்ம் மோசமாக இருக்கும்போது அணிக்கு பிரச்சனைகள் இருக்கும் என கூறினார்.
இந்திய அணி மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஃபார்ம் குறித்து பேசிய அவர், 2024 டி20 உலக கோப்பை வென்ற பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய கொண்டாட்டங்கள் குறித்தும் 1983ஆம் ஆண்டு இந்திய அணியை வழிநடத்தி ஒருநாள் உலகக் கோப்பையை பெற்றுத்தந்த முன்னாள் கேப்டன் கபில் தேவ் நினைவு கூர்ந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை. ரசிகர்கள் கோபமாக இருப்பது நியாயமானதுதான். 2024 டி20 உலகக் கோப்பையை வென்று திரும்பியபோது, என் வாழ்நாளில் பார்த்திராத பைத்தியக்காரத்தனமான விஷயங்கள் அரங்கேறின. எனவே வீரர்கல் மோசமாக விளையாடும்போது விமர்சனங்கள் வரும். அதைத்தான் நான் சொல்கிறேன். வீரர்களை அவர்களால் கையாள முடியாத அளவிற்கு புகழ்ந்து பேசாதீர்கள். பின்னர் அவர்களை மோசமாக விமர்சிக்காதீர்கள். இது எனது கருத்து என கபில் தேவ் பேசினார்.
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விகீ), ரிஷப் பந்த் (விகீ), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரிட் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
மேலும் படிங்க: IND vs ENG: விராட் கோலிக்காக நீக்கப்படும் வீரர்! நன்றாக விளையாடியும் சோகம்!
மேலும் படிங்க: சிஎஸ்கே அணிக்கு ஜாக்பாட்; தீபக் சாஹர் இல்லைனா என்ன? இந்த வீரர் சிஎஸ்கேவுக்கு விக்கெட்டை அள்ளி கொடுப்பார் போலயே!