இம்பால்: மணிப்பூர் மாநிலம் தவுபால் மாவட்டத்தில் உள்ள இந்திய ரிசர்வ் பட்டாலியன் புறக்காவல் நிலையத்தில் இருந்து, அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய குழு ஆயுதங்களை கொள்ளையடித்துச் சென்றதாக இன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “பல்வேறு வாகனங்களில் வந்த ஆயுதம் ஏந்தியவர்கள், தவுபாலில் உள்ள காக்மயாயாயில் உள்ள இந்திய ரிசர்வ் பட்டாலியன் மற்றும் மணிப்பூர் ரைபில்ஸிடமிருந்து குறைந்தது ஆறு எஸ்எல்ஆர்கள் மற்றும் மூன்று ஏகே துப்பாக்கிகளை கொள்ளையடித்துச் சென்றனர். மேலும், அந்த புறக்காவல் நிலையத்தில் இருந்து 270 தோட்டாக்கள் மற்றும், 12 மேகஸின்களையும் கொள்ளையடித்துச் சென்றனர்” என்று தெரிவித்தனர்.
மேலும் “கொள்ளை நடந்த இடத்துக்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.