கடலூர்: நாளை தைப்பூசத்தையொட்டி, வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இதையொட்டி, இன்று சத்திய ஞான சபையில் தைப்பூச விழா கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. வள்ளலார் என்றழைக்கப்படும் ராமலிங்க சுவாமிகள் வடலூரில் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூசப் பெருவிழா விமரிசையாக நடைபெறும். இதையொட்டி நடைபெறும் ஜோதி தரிசனத்தைக் காண லட்சத்துக்கும் மேற்பட்டோர் வடலூருக்குத் திரண்டுவருவர். இங்கு […]
