பும்ரா சாம்பியன்ஸ் டிராபி விளையாடுவாரா.. பிசிசிஐ எடுத்துள்ள முடிவு என்ன? வெளியான தகவல்!

Jusprit Bumrah: இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சாளராக திகழ்பவர் ஜஸ்பிரித் பும்ரா. இந்தியாவின் பல ஈக்கட்டான சூழ்நிலைகளில் அற்புதமாக பந்து வீசி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு இழுத்துச்சென்றவர். சமீபமாக நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் கூட இந்திய அணி கடுமையாக சொதப்பியது. ஆனால் எதிரணிக்கு ஓரளவுக்கு டஃப் கொடுக்க காரணமாக இருந்தவர் ஜஸ்பிரித் பும்ராதான். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின்போது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். ஆனால் சாம்பியன்ஸ் டிராபி வரும் 19ஆம் தேதி தொடங்க உள்ளதால் இந்திய அணியின் ரசிகர்கள் இவரது வருகைக்காக காத்திருக்கின்றனர். 

முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு பும்ரா திரும்ப வாய்ப்புள்ளது என கூறப்பட்டது. ஆனால் பலத்த காயத்தால் அவதிபட்டு வரும் ஜஸ்பிரித் பும்ரா பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஓய்வு எடுத்து வருகிறார். 

மேலும் படிங்க: டிராவிட்டை முந்தி ரோகித் சாதனை.. odi-ல் அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியல்!

அவரது காயம் குறித்து மருத்துவர்களிடம் இருந்து அறிக்கைகள் வெளியாகும். அதை வைத்தே அவர் உறுதியாக சாம்பியன்ஸ் டிராபி விளையாடுவாரா மாட்டாரா என தெரிவிக்க முடியும் என தெரிவித்திருந்தனர். 

1% வாய்ப்பிருந்தால் கூட பிசிசிஐ ஆர்வம் காட்டும்

இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவாரா? அவரது விஷயத்தில் பிசிசிஐ எந்தமாதிரியான முடிவை எடுத்துள்ளது என்பது குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதன்படி, கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரின்போது காயமடைந்த ஹர்திக் பாண்டியாவுக்காக கடைசிவரை காத்திருந்தது போல, பும்ராவுக்காக கடைசி வரை காத்திருக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட வாய்ப்பில்லை என்பது முழுமையாக (100%) உறுதியான பிறகே அவருக்கான மாற்று வீரர் உறுதி செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. அவர் விளையாட 1 சதவீதம் வாய்ப்பு இருந்தால் கூட பிசிசிஐ முனைப்பு காட்டும் என கூறப்படுகிறது. 

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விகீ), ரிஷப் பந்த் (விகீ), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்

மேலும் படிங்க: Ind vs Eng: தோல்விக்கு இதுவே காரணம்.. புலம்பும் ஜோஸ் பட்லர்!

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.