அதிகாரங்களை ஒப்பந்ததாரருக்கு மாற்றிய பெண் பஞ்சாயத்து தலைவர்

போபால்: மத்திய பிரதேசத்​தில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை​யில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்​றது. இந்த தேர்​தலில் மத்திய பிரதேசத்​தின் நீமச் மாவட்​டம், தாடா பஞ்சா​யத்து தலைவராக கைலாஷி பாய் கசாவா என்பவர் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார்.

கடந்த மாதம் இவர் தனது பதவிக்கான அதிகாரங்​கள், உரிமைகளை உள்ளூர் ஒப்பந்​த​தாரர் சுரேஷ் என்பவருக்கு தாரைவார்த்து உள்ளார். இதுதொடர்பாக இருவருக்​கும் இடையே ரூ.500 மதிப்புள்ள முத்​திரை தாளில் ஒப்பந்தம் கையெழுத்​தாகி உள்ளது.

அந்த ஒப்பந்​தத்​தில் கைலாஷி பாய் கசாவா கூறி​யிருப்​ப​தாவது: தாடா கிராம பஞ்சா​யத்து தலைவராக என்னால் திறம்பட பணியாற்ற முடிய​வில்லை. எனவே எனது பதவிக்கான அதிகாரங்​கள், உரிமைகளை ஒப்பந்​த​தாரர் சுரேஷுக்கு வழங்​கு​கிறேன்.

4 மடங்கு இழப்​பீடு: இதன்படி 100 நாள் வேலை திட்​டம், பிஎம் ஆவாஸ் யோஜனா, குடிநீர் விநி​யோகம் உள்ளிட்ட பணிகளை சுரேஷ் மேற்​கொள்​வார். அவர் வழங்​கும் ஆவணங்​களில் மறுப்பு தெரிவிக்​காமல் நான் கையெழுத்​திடு​வேன். இந்த விதிகளை மீறினால் 4 மடங்கு இழப்​பீடு வழங்​க​வும் ஒப்புக் கொள்​கிறேன். இவ்வாறு ஒப்பந்​தத்​தில் கைலாஷி பாய் கசாவா உறுதி அளித்​திருக்​கிறார்.

இந்த ஒப்பந்த நகல் சமூக வலைதளங்​களில் வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து மாவட்ட பஞ்சா​யத்து நிர்வாக தலைமை செயல் அதிகாரி அமன் வைஷ்ணவ், தாடா பஞ்சா​யத்து தலைவர் கைலாஷி பாய் கசாவாவுக்கு நோட்​டீஸ் அனுப்பி உள்ளார். அதில், “உரிய விளக்கம் அளிக்​கா​விட்​டால் பஞ்சா​யத்து தலைவர் பதவி​யில் இருந்து நீக்​கப்​படு​வீர்​கள்” என்று எச்சரிக்கை விடுக்​கப்​பட்டு உள்ளது.

இந்த விவகாரம் குறித்து பஞ்சா​யத்து தலைவர் கைலாஷி பாய் கசாவா​வின் கணவர் ஜெகதீஷ் கூறும்​போது, “பஞ்​சா​யத்து தலைவர் பதவிக்கான அதிகாரங்​கள், உரிமைகளை ஒப்பந்​த​தாரர் சுரேஷுக்கு வழங்​க​வில்லை. சில கட்டுமான பணிகளை மேற்​கொள்ள மட்டுமே அவருக்கு ஒப்பந்​தத்தை வழங்​கினோம்” என்று தெரி​வித்​தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.