லாகூர்,
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து முன்னாள் கேப்டன் வில்லியன்சன் சதம் அடித்து அசத்தினார். 133 ரன்கள் விளாசிய 34 வயதான வில்லியம்சன், அத்துடன் ஒரு நாள் போட்டியில் 7 ஆயிரம் ரன்களை கடந்தார்.
இதுவரை 167 ஆட்டங்களில் பங்கேற்றுள்ள வில்லியம்சன் அதில் 159 இன்னிங்சில் பேட் செய்து 14 சதம், 46 அரைசதம் உள்பட 7,001 ரன்கள் சேர்த்துள்ளார். 7 ஆயிரம் ரன்களை அதிவேகமாக எட்டிய 2-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார். தென்ஆப்பிரிக்காவின் அம்லா 150 இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டியதே அதிவேக சாதனையாக தொடருகிறது.
மேலும் ராஸ் டெய்லர், ஸ்டீபன் பிளமிங், மார்ட்டின் கப்தில், நாதன் ஆஸ்டில் ஆகியோருக்கு பிறகு 7 ஆயிரம் ரன்களை கடந்த 5-வது நியூசிலாந்து வீரராகவும் சாதனை வரிசையில் வில்லியம்சன் இணைந்தார்.