சிங்கப்பூரில் பயங்கரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு: மந்திரி எச்சரிக்கை

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் பயங்கரவாத தாக்குதல் எப்போது வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளதால், அதை எதிர்கொள்ள மக்கள் மனதளவில் தயாராக இருக்க வேண்டும்” என, அந்நாட்டின் உள்துறை மற்றும் சட்டத்துறை மந்திரி சண்முகம் தெரிவித்து உள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சண்முகம் கூறியதாவது:- சிங்கப்பூரில் பயங்கரவாதத்தால் ஈர்க்கப்பட்ட மூவர் மீது உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அவர்களில் ஒருவர் 18 வயது சிங்கப்பூர் இளைஞர். சிங்கப்பூரில் வலதுசாரித் தீவிரவாதச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மூன்றாவது இளைஞர் அவர். உலக அளவில் பயங்கரவாத சித்தாந்தத்தால் ஈர்க்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதனால் ஏற்படும் அச்சுறுத்தல்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.சிங்கப்பூரில் பயங்கரவாத தாக்குதல் எப்போது வேண்டுமானாலும் அரங்கேற வாய்ப்புள்ளது. எனவே, இங்கு வசிக்கும் மக்கள் அதை எதிர்கொள்ள தங்களை மனதளவில் தயார்படுத்தி கொள்ள வேண்டும்” என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.