Coolie Update: விரைவில் வீடியோ அப்டேட்; ரஜினி – ஆமிர் கானின் ஆக்‌ஷன் காட்சி; வியந்த லோகேஷ்

ரஜினியின் ‘கூலி’பட படப்பிடிப்பு நிறைவடையும் கட்டத்தில் மும்முரமாக போய்க் கொண்டிருக்கிறது. ‘கூலி’ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

கூலி பட செட்டில் ரஜினியுடன் உபேந்திரா

ஏனென்றால் அவர் ரஜினி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் கூலியின் படப்பிடிப்பு சென்னை, ராஜஸ்தான், மீண்டும் சென்னை என சீறிப்பாய்ந்து நடந்து வருகிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன், சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் என மல்டி ஸ்டார்கள் நடித்து வந்த நிலையில், அமீர்கானும் இணைந்திருக்கிறார். முதல் முறையாக ரஜினியுடன் இணைந்திருக்கும் லோகேஷ் கனகராஜ், படப்பிடிப்பில் ரஜினியின் பங்சுவாலிட்டியைப் பார்த்து வியந்திருக்கிறார். காலை 9 மணிக்கு முதல் ஷாட் வைக்கிறார்கள் என்றால், எட்டு மணிக்கெல்லாம் ஸ்பாட்டில் ரெடியாகி விடுகிறார் ரஜினி. 170 படங்களுக்கு பிறகும் கூட, சரியான நேரத்தில் படப்பிடிப்பில் ரஜினி இருப்பது லோகேஷை வியக்க வைத்து வருகிறது.

லோகேஷ், ரஜினி

இந்த படத்தில் நாகார்ஜூனாவும், உபேந்திராவும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் ஸ்கோர் செய்து வருகின்றனர். சத்யராஜின் மகளாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார் என்றும், இந்தப் படத்திற்குப் பின், தமிழில் ஸ்ருதி மீண்டும் ஒரு ரவுண்ட் வருவார் என்றும் சொல்கின்றனர். படத்தில் ஒவ்வொரு ஸ்டார் நடிகர்களுக்குமே ஆக்‌ஷன் சீக்குவென்ஸ்கள் அதிரடியாக இருந்தாலும், ரஜினி – அமீர்கான் இருவருக்குமான காட்சிகளில் அனல் தெறிக்கும் என்கின்றனர்.

‘கூலி’ ரஜினி

சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் கூட, அவர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 80 சதவிகிதம் படபிடிப்பு நிறைவடைந்து விட்டது என்றும், மார்ச் மாத இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என்கின்றனர். ‘கூலி’யை முடித்த கையோடு ரஜினி ‘ஜெயிலர் 2’ படத்திற்கும், லோகேஷ் அடுத்து கார்த்தியை வைத்து இயக்கும் ‘கைதி 2’க்கு செல்கின்றனர். ஏப்ரல் முதல் வாரத்தில் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தொடங்குகிறது என்கின்றனர். ஏப்ரல் 14-ம் தேதி கூலி படத்தின் க்ளிம்ஸ் வீடியோ ஒன்றையும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது படக்குழு!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

வீரயுக நாயகன் வேள்பாரியை Audio Formatல் கேட்க Link : இங்கே க்ளிக் செய்யவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.