இந்தியாவின் கோடீஸ்வர தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, வீடுகளுக்கு வயர்லெஸ் இணைய சேவையை வழங்குவதற்காக ஜியோ ஏர்ஃபைபரைத் தொடங்கியுள்ளது. இப்போது நிறுவனம் இந்த சேவையின் கீழ் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையிலான சிறந்த இணையத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ ஏர்ஃபைபரின் மலிவான கட்டணத்திலான சிறந்த திட்டத்தில், 100 எம்பிபிஎஸ் வேகத்தைப் பெறுவீர்கள். ஜியோ ஏர்ஃபைபரில் 5ஜி இணைய வேகம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ ஏர்ஃபைபர் 5G FWA (நிலையான வயர்லெஸ் அணுகல்) என்றும் அழைக்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ ஃபைபரின் 100 எம்பிபிஎஸ் இணையத் திட்ட விபரம்
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) ஏர்ஃபைபரின் 100 எம்பிபிஎஸ் திட்டத்தில், 1000 ஜிபி அதிவேக டேட்டா பெறலாம். பயனர் இதன் மூலம் சிறந்த அதிவேக இணைய வசதியை பெறுகிறார். இது மட்டுமின்றி, பயனாளர் விரும்பினால், ஒரு வருடம் முழுவதற்கும் ஆன பிளானை எடுத்துக் கொள்ளலாம். இந்த வேகத் திட்டத்தை ஒரு வருடத்திற்கு எடுத்துக் கொண்டால், பயனருக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். இருப்பினும், நீங்கள் விரும்பினால், நீங்கள் ஒரு மாதம் அல்லது 3 மாதங்களுக்கு ஒரு டெஸ்ட் பேக்கேஜையும் எடுத்துக் கொள்ளலாம்.
இன்ஸ்டாலேஷன் கட்டணம் தள்ளுபடி
ஓராண்டுக்கான திட்டத்தை பெற்றால், ஜியோ நிறுவனம் இலவசமாக செட்டாப் பாக்ஸ் தருகிறது. இருப்பினும், 1 மாத திட்டத்தில் கூட இதை இலவசமாகப் பெறலாம். ஆனால், 12 மாத திட்டத்தை எடுத்துக் கொளவதால் செலவு மிகவும் குறையும். ஏனெனில், நிறுவனம் ஒரு வருட திட்டத்திற்கான இன்ஸ்டாலேஷன் கட்டணத்தை தள்ளுபடி செய்கிறது.
100 Mbps வேகத் திட்டங்கள்
Jio AirFiber திட்டங்களில், 100 Mbps வேகத் திட்டங்கள் இரண்டு வகைகளில் வருகின்றன. மாதத்திற்கு ரூ.899க்கு கிடைக்கும் இந்தத் திட்டத்தில், வரம்பற்ற இணையத்துடன் சில வரையறுக்கப்பட்ட OTT இயங்குதளங்களுக்கான அணுகலைப் பெறுவீர்கள். அதேசமயம் மாதத்திற்கு ரூ.1199 திட்டத்தில், வரம்பற்ற இணையத்துடன் பல OTTகளுக்கான அணுகலைப் பெறுவீர்கள்.
ஜியோவின் ரூ.899 திட்டம்
ஜியோவின் ரூ.899 திட்டத்தில், Disney+ Hotstar, ZEE5, SonyLIV, JioCinema Premium, SunNXT, Hoichoi, Discovery+, ALTBalaji, Eros Now, LionsgatePlay, ETVWin (JioTV+ வழியாக) மற்றும் ShemarooMe போன்ற OTTகளுக்கான அணுகலைப் பெறுவீர்கள். மாதத்திற்கு ரூ.1,199 திட்டத்தில், மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து OTT சேனல்களுடன் கூடவே, Netflix (Basic), Amazon Prime Lite மற்றும் YouTube Premium ஆகியவற்றுக்கான அணுகலைப் பெறுவீர்கள்.
ரிலையன்ஸ் ஜியோ ஏர்ஃபைபர் பயனர்களுக்கான இந்த திட்டங்கள் இரண்டுமே, மிகவும் சிறப்பு அம்சங்கள் வாய்ந்தது. ஏனெனில் இந்த திட்டங்களில் குறைந்த கட்டணத்தில் பல நன்மைகள் வழங்கப்படுகின்றன.