New Honda Shine 125 gets obd-2b engine and more features – 2025 ஹோண்டா ஷைன் 125 பைக்கின் முக்கிய மாற்றங்கள்..!


ஹோண்டா ஷைன் 125 பைக்

இந்தியாவின் மிகவும் பிரபலமான 125சிசி மோட்டார்சைக்கிள் மாடலான ஹோண்டா ஷைன் 125-யில் OBD-2B மேம்பாடு, புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் அகலமான பின்புற டயர் பெற்று புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் மற்றும் யூஎஸ்பி-சி டைப் சார்ஜிங் போர்ட் கொண்டதாக விற்பனைக்கு ரூ.84,493 (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

2025 Honda Shine 125

புதிதாக நடைமுறைக்கு வரவுள்ள நிகழ்நேரத்தில் மாசு உமிழ்வினை கண்டறிவதுடன், வாகனத்தின் பிரச்சனைகளை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற தீர்வுகளை வழங்கும் வகையிலான பிஎஸ்-6 இரண்டாம் கட்ட OBD-2B மேம்பாட்டினை பெற்ற 123.94சிசி எஞ்சினை சைன் 125 கொண்டிருக்கின்றது.

முன்பாக எஸ்பி 125 பைக் உட்பட ஹோண்டாவின் பல்வேறு மாடல்கள் இது போன்ற மேம்பாடு கூடுதலாக கிளஸ்ட்டரில் டிஜிட்டல் அம்சம் பெற்று வந்திருக்கின்றது.  OBD2B மற்றும் E20 எரிபொருளுக்கு ஏற்றதாக தயாரிக்கப்பட்டுள்ள HET (Honda Eco Technology) நுட்பத்தினை பெற்று 123.94cc, ஏர்-கூல்டு, ஃப்யூவல்-இன்ஜெக்டட் இன்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 10.8hp குதிரைத்திறன், 6,000rpm-ல் 11Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

முக்கிய மாற்றங்களில் ஐடிலிங் ஸ்டாப் சிஸ்டம் சேரக்கப்பட்டு, புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெறுகின்ற நிலையில் நிகழ்நேரத்தில் மைலேஜ், ஈக்கோ இன்டிகேட்டர், சர்வீஸ் நினைவூட்டல் உட்பட பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கும். மற்ற வசதிகளில், யூஎஸ்பி-சி டைப் சார்ஜிங் போர்ட் உடன் முக்கிய மாற்றமாக தற்பொழுது பின்புறத்தில் 90/100-18 அங்குல டயர் வழங்கப்பட்டுள்ளது.

டிசைன் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லாத ஷைன் 125 பைக்கில் தொடர்ந்து பேர்ல் இக்னியஸ் கருப்பு, ஜெனி கிரே மெட்டாலிக், மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக், ரெபெல் ரெட் மெட்டாலிக், டீசென்ட் ப்ளூ மெட்டாலிக் மற்றும் பேர்ல் சைரன் ப்ளூ. ஆறு நிறுங்களுடன் புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் கொண்டுள்ளது.

  • Shine 125 Drum – Rs. 84,493
  • Shine 125 Disc Rs. 89,245

(ex-showroom Delhi)

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் விற்பனையில் உள்ள ஹோண்டா ஷைன் 125 பைக் மிகவும் நம்பகமான மாடலாக தொடர்ந்து சந்தையில் விளங்கி வருகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.