‘குட்டி புலி’, ‘ஜெயில்’, ‘அநீதி’, ‘குடும்பஸ்தன்’ போன்ற படங்களில் கலை இயக்குநராகப் பணிப்புரிந்த சுரேஷ் கல்லேரி நேற்று (பிப்ரவரி13) மாரடைப்பால் காலமாகி இருக்கிறார்.
அவரின் மறைவிற்கு திரைதுறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் வசந்த பாலனும் சுரேஷ் கல்லேரிக்கு இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், “என்னுடைய ஜெயில் மற்றும் அநீதி திரைப்படத்தின் கலை இயக்குநர் சுரேஷ் கல்லேரி நேற்று மாரடைப்பால் காலமானார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/SureshKallery.jpg)
என்னை அளவுக்கதிகமாக நேசிக்கிறவர். என்னுடன் பணிபுரிய அத்தனை ஆசைஆசையாக கைகோர்க்கும் கலை இயக்குநர். சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த குடும்பஸ்தன் திரைப்படத்தின் கலை இயக்குநர். அநீதி திரைப்படத்தில் இடம்பெறும் முக்கியமான கதாபாத்திரமான அந்த கலை நயமிக்க கதவு அவரின் கலைக்குச் சான்று.
இந்த திரையுலகில் Zero percent budget கலை இயக்குநர் என்றால் சுரேஷ் கல்லேரிதான். மனம் கனந்து கிடக்கிறது. இன்று மாலை இறுதி சடங்கு ஏவிஎம் இடுகாட்டில் நடைபெற இருக்கிறது. நண்பர்கள் கலந்து கொள்ளவும்” என்று பதிவிட்டிருக்கிறார்.