இளையராஜாவின் மகளும், பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி மறைந்து ஓராண்டாகியிருக்கும் நிலையில், அவரது திதி நாளான நேற்று (பிப் 12) நினைவு நிகழ்வு நடத்தப்பட்டது.
பவதாரிணியின் நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது. இதில் இளையராஜா, கங்கை அமரன், கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு என இளையராஜாவின் குடும்பத்தினர் பலரும் கலந்துகொண்டிருந்தனர். பவதாரிணி பாடிய பாடல்களின் கச்சேரி நடத்தப்பட்டது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/photo.jpg)
இதில் பேசியிருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு, “கடந்த ஜனவரி 1ம் தேதி நான், யுவன், பவதாரணி எல்லோரும் ஒன்றாகப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ‘G.O.A.T’ படத்தில் ஒரு பாடல் பாடனும்னு பவதாரிணி கிட்டச் சொன்னேன்.
ஹாஸ்பிட்டல் போய்ட்டு உடல்நிலை சரியானதும் வந்து பாடுனு சொல்லிருந்தேன். அந்த மாதத்திற்குள்ளேயே தவறிவிட்டாள். பவதாரிணிக்குக் கொடுத்த அந்த வாக்க காப்பாத்தனும்னு யுவன் கிட்ட சொல்லி ‘AI’ மூலமாக ‘சின்ன சின்ன கண்கள்’ பாடலை உருவாக்கினோம்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/வெங்கட்-பிரபு-பவதாரிணி-யுவன்.jpeg)
யுவனும், பவதாரிணியும்தான் ரொம்ப பாசமாக இருப்பாங்க. யுவன் இசையமைப்பாளராக ஊக்குவித்தது பவதாரிணிதான். யுவனுக்கு குருவே பவதாரிணிதான். யுவனே அதை நிறைய முறை சொல்லியிருக்கான். யுவன் இப்போ இந்தியாவில் இல்லை, அதனால இந்த நிகழ்ச்சிக்கு வர முடியல. யுவனோட நினைவு இங்கதான் இருக்கும்.” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…