Babar Azam: "தயவு செய்து என்னை இப்படி அழைக்காதீர்கள்" – ரசிகர்களுக்கு பாபர் அசாமின் வேண்டுகோள் என்ன?

ஒருநாள் போட்டி தரவரிசையில் டாப் 8 அணிகள் மட்டும் பங்கேற்கும் ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடர், பிப்ரவரி 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்கவிருக்கிறது.

இதில், இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. நடப்பு சாம்பியனான பாகிஸ்தான், சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்கும் முனைப்பில் தொடருக்கு முன்னோட்டமாக நியூசிலாந்து, தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுடன் முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது.

பாபர் அசாம்

மேலும், பாகிஸ்தான் அணி நிர்வாகம் வித்தியாசமாக ஃபகர் சமான், பாபர் அசாம் ஆகியோரை இந்த முத்தரப்பு தொடரில் ஓப்பனிங் வீரர்களாக இறக்கியிருக்கிறது. பாகிஸ்தான் அணி நிர்வாகத்தின் விமர்சனத்துக்குள்ளாகியும் வருகிறது. இந்த நிலையில், தன்னை இவ்வாறு அழைக்க வேண்டாம் என ரசிகர்ளுக்கு பாபர் அசாம் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கிறார்.

இது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய பாபர் அசாம், “தயவு செய்து என்னை கிங் என்று அழைப்பதை நிறுத்துங்கள். நான் கிங் இல்லை, அந்த இடத்துக்கு இன்னும் வரவுமில்லை. எனக்கு இப்போது புதிய பொறுப்புகள் இருக்கின்றன.

பாபர் அசாம்

கடந்த காலங்களில் நான் என்ன செய்திருந்தாலும், ஒவ்வொரு ஆட்டமும் எனக்கு புதிய சவால்தான். தற்போதைய சூழல் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றில் நான் கவனம் செலுத்த வேண்டும்.” என்று கூறினார்.

பாபர் அசாமை அவ்வப்போது விராட் கோலியுடன் ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் அரங்கேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.