Dragon : “சிம்பு சார் அப்போ சொன்ன விஷயம்..!'' – விக்னேஷ் சிவன்

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கிற `டிராகன்’ திரைப்படம் இம்மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் அனுபாமா, கயடு லோகர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. பிரதீப் ரங்கநாதனை வைத்து `லவ் இன்ஸுரன்ஸ் கம்பேனி’ திரைப்படத்தை இயக்கியிருக்கும் விக்னேஷ் சிவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இவ்விழாவில் பேசிய அவர், “இந்த விழாவுல என்னுடைய நண்பர்கள்தான் இருக்காங்க. பிரதீப்கூட நாங்களும் ஒரு படம் பண்ணிட்டு இருக்கோம். அவரை நான் ஷார்ட் பிலிம்ஸ்ல இருந்து பார்த்துட்டு இருக்கேன். என் வாழ்க்கையோட கடினமான சூழல்ல இருக்கும்போதுதான் பிரதீப்புக்கு கால் பண்ணிதான் வேலை பார்க்கலாம்னு சொன்னேன். அந்த சமயத்துல நாங்க மீட் பண்ணி கதை சொல்லி உருவான திரைப்படம்தான் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பேனி’ திரைப்படம். நடிகர்களோட நடிப்பை வச்சு நம்ம அவங்களை கொண்டாடுவோம். அவங்க எப்படியான படம் பண்றங்கனு அவங்களை நம்ம ரசிப்போம்.

Vignesh Shivan – Dragon Event

ஆனால், மற்றொரு பக்கம் அவங்க எப்படியான கதாபாத்திரங்கள்ல நடிக்கிறாங்கனு பார்க்காமல் முன்பு இருந்தே பின்தொடர்ந்து வருவோம். அப்படி தொடர்ந்து அவங்களோட நடிப்பை, மேனரிஸத்தை பார்த்து அவங்களுக்கு ரசிகராக மாறியிருப்போம். அப்படி நிறைய ரசிகர்கள் சேரும்போதுதான் அந்த நடிகர் ஸ்டாராக உருவெடுப்பாங்க. அந்த வகையில பிரதீப் ஒரு ஸ்டார் மெட்டிரீயல்னு ஃபீல் பண்றேன். அவருக்கு ரசிகர்கள் அதிகளவுல இருப்பாங்க. இனி வரப்போகிற படங்கள்ல அதனுடைய வெளிப்பாடு தெரியும். பொதுவாக நான் பாடல் வரிகள் எழுதும்போது என்னுடைய மனசுல இருந்து எழுதுவேன். அப்படி சில பாடல்களை மனசுக்கு நெருக்கமாக உணர்வோம். `போடா போடி’ படத்துக்கு `அய்யோ மாட்டிகிட்டேன்’னு ஒரு பாடல் எழுதியிருந்தேன். அந்த பாடல் பண்ணி ஒரு வருடத்துக்கு அந்தப் பாடலை ஷூட் பண்ணவே இல்ல. சிம்பு சார், `டேய் விக்கி, வரிகளைப் பாத்து எழுது’னு நகைச்சுவையாக சொன்னாரு. அதன் பிறகு `எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும்’னு ஒரு பாடல் எழுதினேன். அந்தப் பாடலுக்குப் பிறகு எனக்கு படங்கள் அதிகமாக கிடைச்சது. என்னை தொடர்ந்து லிரிக்ஸ் எழுத வைக்கிற இயக்குநர்களுக்கு நன்றி.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.