டெல்லி திமுக எம் பி ஆ ராசா உச்சநீதிமன்றத்தில் வக்பு சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்துள்ளார். திமுக எம்.பி. ஆ.ராசா டெல்லியில் செய்தியாளர்களிடம், ”வக்பு வாரிய சட்டத்திருத்தம் தொடர்பாக இந்தியா முழுவதும் பயணித்த நாடாளுமன்ற கூட்டுக்குழு இறுதியாக கடந்த மாதம் பாட்னா, கொல்கத்தா மற்றும் லக்னோ ஆகிய 3 நகரங்களிலும் கருத்துகளை கேட்டது. அதனை கூட்டுக்குழுவின் தலைவரிடம் சமர்ப்பிக்க 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் வழங்கப்பட்ட கால அவகாசம் […]
