Mahindra XEV 9e on-road price – மஹிந்திரா XEV 9e எலக்ட்ரிக் எஸ்யூவி ஆன்-ரோடு விலை மற்றும் ரேஞ்ச்.!


XEV 9e எலக்ட்ரிக் எஸ்யூவி ஆன்-ரோடு விலை

மஹிந்திரா எலக்ட்ரிக் ஆரிஜின்ஸ் பிரிவில் வெளியிடப்பட்டுள்ள புதிய XEV 9e மாடலில் 79Kwh மற்றும் 59Kwh பெற்றுள்ள பேட்டரி பேக் பெற்று ஆரம்ப ஆன்-ரோடு விலை ரூ.23.54 லட்சம் முதல் துவங்குகின்றது.

பிப்ரவரி 14 ஆம் தேதி காலை 9 மணி முதல் முன்பதிவு துவங்கப்பட்டு முதற்கட்டமாக மார்ச் மாதம் முதல் 79Kwh பேட்டரி பேக் பெற்ற டாப் வேரியண்ட் டெலிவரி வழங்கப்பட உள்ளது.

Mahindra XEV 9e on-road price

எக்ஸ்இவி 9இ மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.21.90 லட்சம் துவங்குகின்ற நிலையில், இதன் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை பட்டியல் அட்டவனையில் உள்ளது.

Variant  Ex-showroom Price  on-road Price 
Pack One (59kWh) Rs 21,90,000 Rs 23,54,980
Pack Two (59kWh) Rs 24,90,000 Rs 26,94,010
Pack Three Select (59kWh) Rs 27,90,000 Rs 30,13,065
Pack Three (79kWh) Rs 30,50,000 Rs 32,79,080

கொடுக்கப்பட்டு விலையில் சார்ஜர் இணைக்கப்படவில்லை, ஆனால் கட்டாயம் சார்ஜர் வாங்க வேண்டும் என்ற மஹிந்திரா கூறுகின்றது. எனவே, 7.2Kw சார்ஜரை பெறும் பொழுது ரூ.50,000 அல்லது 11Kw சார்ஜரை வாங்கும் பொழுது ரூ.75,000 ஆக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


mahindra xev 9e dashboardmahindra xev 9e dashboard

ஆரம்ப நிலை எக்ஸ்இவி 9இ 59Kwh பேட்டரி பேக் கொண்டுள்ள  பவர்  231hp, 380Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், 542 கிமீ ரேஞ்ச் வழங்கும் என ARAI சான்றிதழ் வழங்கியள்ளது.

அடுத்து, டாப் வேரியண்ட் 79Kwh பேட்டரி பேக் கொண்டுள்ள XEV 9e வேரியண்ட் பவர்  286hp, 380Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், 656 கிமீ ரேஞ்ச் வழங்கும் என ARAI சான்றிதழ் வழங்கியள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.