இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது: பிரதமர் மோடி

வாஷிங்டன்,

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை பிரதமர் மோடி இன்று சந்தித்தார். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:-

உங்களை மீண்டும் வெள்ளை மாளிகையில் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 140 கோடி இந்திய மக்களின் சார்பாக உங்களை வாழ்த்துகிறேன். இந்திய மக்கள் எனக்கு மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க வாய்ப்பளித்துள்ளனர். நமது இரு நாடுகளின் முன்னேற்றம் மற்றும் செழுமையை நோக்கி நாம் ஒன்றாகப் பயணிப்போம். இந்தியா நடுநிலையாக இல்லை.

புதினுடன் நான் ஏற்கனவே பேசியிருக்கிறேன். இந்த யுகம் போருக்கானது இல்லை என அவரிடம் கூறியுள்ளேன். போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நான் ஆதரவு அளிக்கிறேன். உலகின் மிக பழமையான ஜனநாயக நாடாக அமெரிக்கா உள்ளது. இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு ஆகும்.

எனவே, இந்தியாவும் அமெரிக்காவும் ஒருங்கிணைந்து வரும் போது மிக்கப்பெரிய பலம் பெறும். மனித குலத்தின் நலனுக்காக நாங்கள் பணியாற்றுவோம்” என்றார். பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய பிரதமர் மோடி, அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை அழைத்துக் கொள்ள தயார்.

நான் எப்போதும் ரஷ்யா, உக்ரைனுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன்; இரு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்துள்ளேன். பலரும் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலையோடு இருப்பதாக தவறாக நினைக்கிறார்கள், உண்மையில் இந்தியா அமைதியின் பக்கமே நிற்கிறது.

இது போருக்கான நேரமில்லை என்பதை நான் புதினிடமே தெரிவித்துள்ளேன்; இன்றும் கூட, தீர்வுகளை போர்க்களத்தில் காண முடியாது என்பதே எனது நம்பிக்கை. இரு நாடுகளும் (ரஷ்யா மற்றும் உக்ரைன்) கலந்து கொள்ளும் மன்றத்தில் இந்தப் பிரச்சினை விவாதிக்கப்படும்போதுதான் போருக்குத் தீர்வு காண முடியும் என்று இந்தியா நம்புகிறது.

போர் நிறுத்தத்திற்காக அதிபர் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகளை நான் ஆதரிக்கிறேன், வரவேற்கிறேன். கூடிய விரைவில் அம்முயற்சியில் அவர் வெற்றி பெறுவார் என நம்புகிறேன்’என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.