சென்னை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை திட்டம் இன்னும் 3 மாதங்களில் விரிவுபடுத்தப்படும் என அறிவித்துள்ளார். இன்று இந்து சமய அறநிலையத்துறை சென்னை மாவட்ட கோவில்கள் சார்பில் 30 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி ராஜா அண்ணாமலைபுரம் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற திருமண விழாவில் துணை முதல்வர்ர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 30 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். […]
