சென்னை: மயிலாடுதுறையில் கள்ளச்சாராய வியாபாரிகளால் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், உண்மையை மூடி மறைக்க காவல்துறை முயற்சிக்கக் கூடாது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொல்லப்பட்ட இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் , மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் சட்டவிரோத கள்ளச்சாராய விற்பனையை தட்டிக் […]
