தற்போது இந்திய அணியின் ரசிகர்கள் சாம்பியன்ஸ் டிராபிக்காக காத்து கொண்டுள்ளனர். ஆனால் அதைவிட அதிகமாக ஐபிஎல் போட்டிகளுக்காக காத்துக்கொண்டுள்ளனர். மார்ச் 22ம் தேதி ஐபிஎல் 2025 போட்டிகள் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஆர்சிபி அணிகள் விளையாட உள்ளன. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் அட்டவணை வெளியாகும் போதெல்லாம் அனைவரும் தேடும் ஒரு போட்டி என்றால் அது சென்னை vs மும்பை தான். El Clasico என்று அழைக்கப்படும் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியை காண பலரும் ஆர்வமாக உள்ளனர்.
சிஎஸ்கே vs எம்ஐ
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிகள் இதுவரை தலா 5 முறை ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளனர். இந்த முறை எப்படியாவது 6வது பட்டத்தை வெல்ல வேண்டும் என்று இரு அணிகளும் போட்டி போட்டு வருகின்றன. அத போல கடத்த சில போட்டிகளில் மும்பை அணி சென்னையை வீழ்த்தவில்லை. இதனாலும் சென்னையை சென்னையில் வைத்து வெல்ல வேண்டும் என்று மும்பை ஆர்வமாக உள்ளது. தற்போது வெளியான தகவலின் படி, ஐபிஎல் 2025ல் சிஎஸ்கே மற்றும் எம்ஐ அணிகள் விளையாடும் போட்டி மார்ச் 23 அன்று சென்னையில் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
முதலில் ஐபிஎல் 2025 போட்டிகள் மார்ச் 21 அன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மார்ச் 22ம் தேதி தொடங்கும் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி மார்ச் 9ம் தேதி நடைபெற உள்ள நிலையில், 12 நாள் இடைவெளியில் ஐபிஎல் போட்டிகள் தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஈடன் கார்டனில் மார்ச் 22 அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை எதிர்கொள்ள உள்ளது. மார்ச் 23 அன்று மாலையில் சன்ரைஸஸ் மற்றும் ராஜஸ்தான் அணியும், மாலை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளனர். ஐபிஎல் 2025 இறுதி போட்டி மே 25ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.
தற்போது வரை ஐபிஎல் தொடர்பாக வெளியான தகவல்கள்
ஐபிஎல் 2025 முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மார்ச் 22ம் தேதி ஈடன் கார்டனில் விளையாட உள்ளனர். ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி மே 25 அன்று ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும்.
மார்ச் 23ம் தேதி மாலை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மாலை சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாட உள்ளது.
ஐபிஎல் 2025 போட்டிகள் மொத்தமாக 13 இடங்களில் நடைபெற உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கவுகாத்தியை இரண்டாவது ஹோம் மைதானமாக தேர்வு செய்துள்ளது. அதே சமயம் பஞ்சாப் அணி தர்மசாலாவை இரண்டாவது ஹோம் மைதானமாக தேர்வு செய்துள்ளது.