வதோதரா,
5 அணிகள் கலந்து கொண்டுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 2 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த ஆட்டங்களில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்த தொடரின் 3வது லீக் ஆட்டம் வதோதராவில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் – உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோத உள்ளன. தனது தொடக்க ஆட்டத்தில் தோல்வி கண்ட குஜராத் அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப கடுமையாக போராடும்.
அதேவேளையில் தொடரை வெற்றியுடன் தொடங்க உ.பி.வாரியர்ஸ் முயற்சிக்கும். இதனால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
Related Tags :