Live Updates
-
16 Feb 2025 2:51 PM IST
இந்தி திணிப்பு எந்த வடிவில் வந்தாலும் அதிமுக கடுமையாக எதிர்க்கும்; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
-
16 Feb 2025 1:57 PM IST
மும்மொழி கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க மத்திய அரசு மறுப்பதெல்லாம், சரியல்ல என கூறியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாட்டில் இருந்து வரியை மட்டும் ஏன் பெறுகிறீர்கள்? என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
-
16 Feb 2025 1:30 PM IST
அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு 119 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட நிலையில், அவர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டனர் என மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
-
16 Feb 2025 1:20 PM IST
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
-
16 Feb 2025 12:14 PM IST
சென்னை துறைமுகம் வழியாக, ரூ.2 கோடி மதிப்புள்ள பச்சை பட்டாணி முறைகேடாக இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மோசடி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. டெக்ஸ்டைல் பொருட்கள் இறக்குமதி செய்வதிலும் அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. சுங்கத்துறை அதிகாரிகளுடன், இறக்குமதியாளர்கள் இணைந்து மோசடிகளை அரங்கேற்றியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
-
16 Feb 2025 11:33 AM IST
சிவகங்கை மாவட்டம் ஒக்கூரில், பாம்பு கடித்து உயிருக்கு போராடிய 4 வயது சிறுமியை அரசு மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். அந்த சிறுமி, பூரண குணமடைந்த நிலையில், மருத்துவர்கள் முன்னிலையில் சிறுமியின் குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
-
16 Feb 2025 10:51 AM IST
ராணிப்பேட்டையில் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் அதிகாலை நடிகர் யோகி பாபு சென்ற கார் விபத்தில் சிக்கியது என தகவல் வெளியானது. ஆனால், அதில் உண்மையில்லை என அவர் கூறியுள்ளார். நான் நலமுடன் இருக்கிறேன். படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறேன் என்று நடிகர் யோகி பாபு கூறியுள்ளார்.
-
16 Feb 2025 10:27 AM IST
தி.மு.க.வில் சமீபத்தில் இணைந்த நடிகர் சத்யராஜின் மகள் திவ்யாவுக்கு, கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதனை தி.மு.க.வின் கட்சி தலைமை அறிவித்து உள்ளது.
-
16 Feb 2025 10:19 AM IST
சென்னை பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் பணி முடிந்து வீடு திரும்பிய பெண் காவலரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த சத்யபாலு என்பவரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
-
16 Feb 2025 9:29 AM IST
தமிழர்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்… முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
“மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது” என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்! எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்…” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.