Vetrimaaran: "'விடுதலை' எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கு; இதுபோல் இன்னொரு படம்…" – வெற்றிமாறன்

வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ‘விடுதலை’ இரண்டு பாகங்களும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.

அரசியல், கருத்தியல், மக்களுக்கான போராட்டம், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை எனத் துணிச்சலுடன் மக்கள் போராளிகள் பற்றிப் பேசியிருந்தன.

‘விடுதலை’ படப்பிடிப்பில் சூரி, வெற்றிமாறன், விஜய் சேதுபதி

இந்நிலையில் ‘விடுதலை 2’ படத்திற்காக வெற்றிமாறனுக்கு ‘Caib Award’ விருது வழங்கப்பட்டது. இந்த விருது விழா மேடையில் பேசியிருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், “எங்க டீம் எல்லாருக்குமே ‘விடுதலை’ ரொம்ப ஸ்பெஷலான படம். அதுல உழைப்பு, படிப்பு என நிறையக் கற்றுக்கொண்டோம்.

ஒரு படத்தைத் தொடங்கும்போது நமக்கு ஒன்னு தெரிஞ்சிருக்கிறதும், முடிக்கும்போது வேற ஒன்னு புதிதாகக் கற்றுக்கொள்வது எப்போதாவது நடக்கும். அது இந்தப் படத்துல நடந்திருக்கு. ஒரு இடத்துல நான் இருக்கிறதா எனக்கு உணர்த்தியது ‘விடுதலை’.

இயக்குநர் வெற்றிமாறன்

தனிப்பட்ட வகையிலும் நான் இந்தப் படத்துல இருந்து நிறையக் கற்றுக்கிட்டேன். உடல் – மன உழைப்பு, அரசியல், தத்துவம், கருத்தியல் என நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது இந்தப் படம். இதற்குப் பிறகு இப்படியொரு படம் பண்ண முடியுமா, அமையுமானு தெரியல” என்று பேசியிருக்கிறார்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.