“எனக்கு படிப்பதற்கு நேரம் குறைவாக இருக்கிறது. சிறையில் அடைத்தால் இன்னும் நிறைய படிக்கலாம். அறிவை வளர்த்து கொள்ளலாம்” என்று சீமான் கூறியுள்ளார். பெரியார் குறித்து இழிவாக பேசியது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல்வேறு அமைப்பினர் பல்வேறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “ஈ.வெ.ரா., குறித்து நான் இகழ்ந்து பேசவில்லை, அவர் பேசியதை தான் கூறினேன். என் […]
