Sivakarthikeyan: "மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட கலைஞன்…" – சீமானின் பிறந்த நாள் வாழ்த்து

கடந்தாண்டு தீபாவளி பண்டிகை வெளியீடாக சிவகார்த்திகேயன் நடித்திருந்த `அமரன்’, அவரின் கரியரில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படமாக ஹிட் அடித்தது.

இப்படம் வெளியாகி 100 நாட்கள் கடந்த நிலையில் கடந்த பிப்., 14ம் தேதி இத்திரைப்படத்தின் வெற்றி விழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றிருந்தது. தனது 25வது படத்தில் இயக்குநர் சுதா கொங்கராவுடன் இணைந்திருக்கிறார். இந்நிலையில், அவரின் பிறந்த நாளான இன்று ரசிகர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலரும் சிவகார்த்திகேயனுக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

‘அமரன்’ படத்தைப் பார்த்து சிவகார்த்திகேயனை ஆரத் தழுவிப் பாராட்டிய இயக்குநரும், நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான், “தன் தனித்துவமிக்க நடிப்புத்திறனாலும், நகைச்சுவை இழையோடும் உடல்மொழியாலும், குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பு மக்களின் உள்ளங்களையும் கொள்ளை கொண்ட திரைக்கலைஞன்,

தன் விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற தன்னுடைய பெருங்கனவை நனவாக்கிய வெற்றி நாயகன், தமிழ்த்திரையுலகின் வளர்ந்து வரும் உச்ச நட்சத்திரம்.

சிவகார்த்திகேயன், சீமான்

என் ஆருயிர் இளவல் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன். அடுத்தடுத்து மக்கள் மகிழும் வெற்றிப்படைப்புகள் பல தந்து சாதனை புரிந்திட அண்ணனின் அன்பும், வாழ்த்துகளும்!” என்று சிவகார்த்திகேயனுக்குத் தனது பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.