விஜய் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான திரைப்படம் `சச்சின்’. இப்படத்தை இயக்குநர் மகேந்திரனின் மகனான ஜான் மகேந்திரன் இயக்கியிருந்தார்.
`சச்சின்’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகளை நிறைவு செய்ய இன்னும் கொஞ்ச நாட்களே இருக்கிறது.
அப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்துவிட்டதைக் கொண்டாட `சச்சின்’ திரைப்படம் இந்தாண்டு கோடையில் ரீ ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பாளர் தானு சமீபத்தில் அறிவித்திருந்தார். ரீ ரிலீஸ் டிரெண்டில் கடந்தாண்டு வெளியான பல திரைப்படங்களும் ஹிட்டடித்திருந்தது. `கில்லி’, `3′ போன்ற திரைப்படங்களுக்கெல்லாம் மக்களின் ஏகோபித்த வரவேற்பும் கிடைத்திருந்தது.
Thank you sir for giving me Sachein and treating me so well throughout the shoot ..
One of my best shoots ever https://t.co/RHERiz3ari— Genelia Deshmukh (@geneliad) February 17, 2025
`சச்சின்’ திரைப்படம் ரீ ரிலீஸாகவிருக்கிறது என அறிவிப்பு வந்ததும் ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் ரீ ரிலீஸ் தொடர்பான அறிவிப்பு போஸ்டரை அதிகளவில் பகிர்ந்தனர். தற்போது நடிகை ஜெனிலியாவும் தயாரிப்பாளரின் அறிவிப்பு பதிவுக்கு பதில் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், “ சச்சின் திரைப்படத்திற்கு என்றும் என் மனதில் இடமுண்டு. சச்சின் படத்திற்கு என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி சார். படப்பிடிப்பு நாட்களும் முழுவதும் என்னை நல்லபடியாக பார்த்துக் கொண்டதற்கு நன்றி. இதுவரை நான் பங்கேற்ற சிறந்த படப்பிடிப்புகளில் இதுவும் ஒன்று!” எனப் பதிவிட்டிருக்கிறார்.
இதுவரை விஜய்யும் ஜெனிலியாவும் `சச்சின்’, `வேலாயுதம்’ என இரண்டு திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
